Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 19, 2016

பெங்களூருவில் 14 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்த மாநகராட்சி ஊழியர் கைது


பெங்களூருவில், 14 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்ததாக மாநகராட்சி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

கட்டாய திருமணம்
பெங்களூரு குமாரசாமி லே–அவுட் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் சீதா(வயது 14). இவர், தனது தாய் மற்றும் அண்ணனுடன் அந்த பகுதியில் உள்ள உறவினர் சந்தோஷ் (இருவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன) என்பவரின் வீட்டில் தங்கியிருந்தார். சீதாவின் தந்தை இறந்து போய்விட்டார். இதனால், சீதாவும் அவருடைய தாயும் வீட்டு வேலை செய்தனர். சந்தோஷ் பெங்களூரு மாநகராட்சியில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், சந்தோஷ், சீதாவை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். இதுகுறித்து, அவர் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதற்கு அவர்களும் ஒப்புக் கொண்டனர். இதற்கிடையே, இந்த திருமணத்தில் சீதாவுக்கு விருப்பம் இல்லை. மேலும், திருமணத்திற்கு சீதாவின் தாயும், அவருடைய சகோதரரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், கடந்த மாதம் 20–ந் தேதி சந்தோஷ், தனது பெற்றோருடன் சேர்ந்து சீதாவை கட்டாயப்படுத்தி இழுத்து சென்று கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

கைது
இதை தட்டிக் கேட்ட சீதாவின் தாய்க்கு அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததோடு, சீதாவின் அண்ணனை அடித்து உதைத்து வீட்டை விட்டு வெளியேற்றியதாகவும் தெரிகிறது. மேலும் சந்தோஷ், சீதாவை வீட்டில் ஒரு அறையில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அடைத்து வைக்கப்பட்டு இருந்த அறையில் இருந்து தப்பித்த சீதா சம்பவம் குறித்து குமாரசாமி லே–அவுட் போலீசில் புகார் செய்தார்.

அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மைனர் பெண்ணை கட்டாய திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுத்ததாக சந்தோசை கைது செய்தனர். மேலும், விசாரணை நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.