பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க இந்தியா அதிஉயர்-தொழில்நுட்ப திட்டத்தை செயல்படுத்த பணியாற்றி வருகிறது.
தீவிரவாதிகள் மற்றும் கடத்தல்காரர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவலை தடுப்பதற்கு மேற்கு எல்லையில் சுமார் 2900 கிலோ மீட்டர் தொலைவில் 5 அடுக்குகள் கொண்ட பாதுகாப்பு அரணை உருவாக்குவதற்கான முன்மொழிவை மத்திய அரசு தெளிவுசெய்து விட்டது என்று ஆங்கிலப்பத்திரிக்கை செய்திவெளியிட்டு உள்ளது. விரிவான ஒருங்கிணைந்த எல்லை மேலாண்மை அமைப்பு (CIBMS) என்று பெயரிடப்பட்ட புதிய திட்டத்தின்படி அதிஉயர் தொழில்நுட்ப உதவியுடன் எல்லையில் 24x7x365 கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.
ஒருங்கிணைந்த இந்த திட்டத்தின்படி எல்லையில் அனைத்து நடவடிக்கையையும் துல்லியமாக கண்காணிக்க முடியும். சி.சி.டி.வி. கேரமாக்கள், இரவிலும் பார்க்ககூடிய கருவிகள், பூமிக்கு அடியில் செயல்பாட்டை கண்காணிக்கும் சென்சார் மற்றும் லேசர் தடுப்பு சுவர் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. திட்டமானது தொடங்கியதும் இவ்வமைப்பு எல்லையில் ஊடுருவல் எதேனும் முன்னெடுக்கப்பட்டால் உடனடியாக முன்னெச்சரிக்கையை கொடுக்கும்...
இந்த பாதுகாப்பு கட்டமைப்பில் லேசர் தடுப்பு சுவர் என்பது முக்கிய பங்கு கொண்டு உள்ளது.
பாகிஸ்தானில் இருந்து எல்லையை தாண்டி இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவுகிறார்கள். குறிப்பாக காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களில் இந்த ஊடுருவல் அதிகம் நடைபெறுகிறது. தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுக்க எல்லையில் பல இடங்களில் வேலி அமைக்கப்பட்டு உள்ளது.
எல்லைப்பகுதி முழுவதும் எல்லை பாதுகாப்பு படையினர் ரோந்து சுற்றி வருகிறார்கள். காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்கள் வழியாக பல ஆறுகள் பாகிஸ்தானுக்குள் செல்கின்றன. மற்ற இடங்களில் தடுப்பு வேலிகள் இருப்பதால் தீவிரவாதிகள் ஆறுகள் மற்றும் வாய்க்கால்கள் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து விடுகிறார்கள். இந்த இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ள போதிலும், தீவிரவாதிகள் ஊடுருவுவதை முற்றிலுமாக தடுக்க முடியவில்லை.
சமீபத்தில் பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்தில் பாகிஸ்தானில் இருந்து வந்த 6 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து ஆறுகள் எல்லையை கடக்கும் பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை பலப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த தீவிரவாதிகள் 6 பேரும் எல்லையில் உஜ் என்ற ஆற்றை கடந்துதான் பஞ்சாப் மாநிலத்துக்குள் புகுந்தது விசாரணையில் தெரியவந்தது.
மலைப்பரப்பு மற்றும் ஆற்றுப் படுகைகள் உள்ளிட்ட தீவிரவாதிகள் ஊடுருவும் சுமார் 130 எல்லையிடப்படாத பகுதிகளில் ‘லேசர் தடுப்பு சுவர்’ பாதுகாப்பு படையினருக்கு உதவியாக இருக்கும்.
ஆறுகள் கடக்கும் அனைத்து இடங்களிலும் லேசர் கதிர் தடுப்பு சுவர் அமைக்கப்படும் பட்சத்தில், அதன் குறுக்காக யாராவது கடக்க முயன்றால் அது காட்டிக்கொடுத்துவிடும். அதாவது லேசர் கதிர்களுடன் இணைக்கப்பட்ட கருவி அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பும். இதன்மூலம் ஊடுருவலை கண்டுபிடித்து தடுக்க முடியும் என்று அதிகாரிகள் கருதுகிறார்கள். காஷ்மீர் மாநிலம் ஜம்மு பகுதியிலும் ஏற்கனவே ஆற்றின் குறுக்கே லேசர் கதிர் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
பஞ்சாப் மாநிலத்தில் எல்லை பகுதியில் ஆறுகள் கடக்கும் இடங்களில் லேசர் கதிர்கள் மூலம் தடுப்பு சுவர் அமைப்பது என்று ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது. லேசர் தடுப்பு சுவர் அமைப்பதற்காக அந்த மாநிலத்தில் ஏற்கனவே 40 இடங்கள் அடையாளம் காணப்பட்டன. அதில் 5 இடங்களில்தான் லேசர் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது. மீதம் உள்ள மற்ற இடங்களிலும் விரைவில் லேசர் தடுப்பு சுவர் அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.