அமெரிக்கா மற்றும் ஈரான் நண்பர்கள் ஆகும்போது இந்தியா - பாகிஸ்தான் ஏன் நண்பர்கள் ஆகமுடியாது என்று ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரி மெகபூபா பேசிஉள்ளார்.
செய்தியார்களிடம் பேசிய மெகபூபா, ”அமெரிக்கா மற்றும் ஈரான் கைகோர்த்து உள்ளநிலையில் அமைதியை நிலைநாட்டுவதிலும், பிராந்தியத்தில் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு புதிய சகாப்தத்தை தொடங்க இந்தியா-பாகிஸ்தான் நண்பர்கள் ஆக முடியாது என்பதில் எந்தஒரு காரணத்தையும் நான் காணவில்லை,” என்று கூறிஉள்ளார். ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி முப்தி முகமது சயீதுவின் மரபை செயல்படுத்தும் மெகபூபா, அமெரிக்கா மற்றும் ஈரானை ஒரு உதாரணமாக எடுத்து,
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு அமைதி மற்றும் சமரசம் தொடர்பாக ஒருவலுவான செய்தியை அனுப்பிஉள்ளார்.
ஹந்த்வாராவில் சமீபத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாக பேசிய மெகபூபா, மிகவும் துரதிஷ்டவசமான சம்பவம் என்று விவரித்து உள்ளார். காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் அமைதி உறுதியாக நிலைப்பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
ஹந்த்வாராவில் கடந்த 12-ம் தேதி, பள்ளி மாணவியை ராணுவ வீரர்கள் மானபங்கம் செய்ய முயற்சித்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து ராணுவத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்திய போது பாதுகாப்பு படையினர் மீது கல்வீச்சு நடைபெற்றதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. வன்முறை சம்பவங்களின் போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.
இருப்பினும் பாதிக்கப்பட்ட மாணவி ராணுவ வீரர்கள் என்னிடம் தவறாக நடந்துக் கொள்ளவில்லை, உள்ளூர் போதை சிறுவர்களே தவறாக நடந்துக் கொண்டனர் என்று கூறினார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.