Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 19, 2016

ஆப்பிரிக்க நாட்டின் அவல நிலை இரவில் பாலியல் தொழில் பகலில் பள்ளிக்கு செல்லும் மாணவிகள்


ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சியரா லியோனில் கல்விக்காக சிறுமியர் முதல் இளம்பெண்கள் வரை தங்களது உடலை விற்று காசு பார்க்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இங்குள்ள பள்ளிகளில் கட்டணமாக ஆண்டுக்கு 40 பவுண்டுகள் வரை வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஏழ்மை காரணமாகவும் அடிப்படை கல்வியை கட்டாயம் முடிக்க வேண்டும் என்பதாலும் பெரும்பாலான இளம் வயது பெண்கள் தங்களை விற்று பள்ளிக்கு செல்கின்றனர்.

தேவைக்கு அதிகமான பணப்புழக்கம் இருப்பதால் சில பெண்கள் முழுநேர விபச்சாரத்தில் ஈடுபடும் கொடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.பள்ளிப்படிப்புக்கான கட்டணத்தை செலுத்துவதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியரையும் இளம் வயது பெண்களையும் சீரழிக்கும் அவல நிலையும் இங்கு உள்ளது.

போதிய விழிப்புணர்வு இல்லாமையால் கருத்தரிக்க நேரிடும் பெண்களை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி ஆண் சமூகம் கைநழுவுவதும், இதனால் தமது குழந்தைக்கும் தமக்கும் என மிக குறைவான ஊதியம் பெறும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்திலும் பெண்கள் தள்ளப்படுகின்றனர்.

இங்குள்ள பல இளம் வயது பெண்களும் இரவில் பாலியல் தொழில் செய்துவிட்டு பகலில் பள்ளிக்கு செல்லும் மாணவிகளாக உள்ளனர். இரவு முழுவதும் கண்விழித்தால் ஒரு இளம் வயது பெண்ணால் 9 பவுண்டுகள் வரையே ஈட்ட முடியும் என்ற நிலையில், அந்த 9 பவுண்ட் பணத்தில் உணவு, உடை, புத்தகம், பள்ளி சீருடை மற்றும் கல்வி கட்டணம் என அனைத்தையும் சமாளித்தாக வேண்டும்.

இதுபோன்ற நிலையில் தவிக்கும் இளம் வயது பெண்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தும் அமைப்பு ஒன்று தெருவோர குழந்தைகள் என்ற இயக்கத்தின் வாயிலாக மகளிர் கல்வியை உறுதி செய்ய முனைப்பு காட்டி வருகிறது. ஒட்டுமொத்தமாக 20,000 சியரா லியோன் சிறுமிகள் முதல் இளம் வயதுபெண்களுக்கு கல்வியை உறுதி செய்வதுடன் அவர்களுக்கு தரமான கல்வியை வழங்கவும் இந்த அமைப்பு திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.