Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 22, 2016

எப்போதும் சோர்வின்றி பணியாற்ற அரசு ஊழியர்களுக்கு பிரதமர் மோடி யோசனைகள்


அரசு ஊழியர்கள் ஓர் அணியாகத் திரண்டு மாற்றத்தின் காரணிகளாக மக்கள் நலன் மற்றும் வளர்ச்சிக்காகப் பாடுபடவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

சிவில் சர்விசஸ் தினமான இன்று அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “சிலர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் பணியாற்றி வருகின்றனர். நாம் அணியாக ஒன்று திரண்டு பணியாற்றினால்தான் முடிவுகள் நமக்கு சாதகமாக அமையும். தேசக் கட்டுமானத்திற்காக தனித்தனியாக பணியாற்றுவதை விடுத்து அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.

முதலில் அரசு ஊழியம் அல்லது சேவைகள் என்பது ஒரு ஒழுங்குமுறைப் படுத்தும் செயல்பாடாக மட்டுமே இருந்தது, பிறகு சில காலம் கழித்து நிர்வாகம் என்றவாறு அதன் பணி மாறியது பிறகு கட்டுப்பாட்டாளர் என்பதாக மாறியது.

மேலும் காலம் மாறும்போது நீங்கள் நிர்வ்வாகத் திறன்களை வளர்த்துக் கொள்வது பற்றி சிந்திக்கத் தொடங்கியிருப்பீர்கள். காலம் மாறிவருகிறது.

நிர்வாகியாகவும், கட்டுப்பாட்டாளராகவும் மட்டுமே இருப்பது போதாது. இன்றைய தினத்தின் முக்கியத் தேவை என்னவெனில் அனைவரும் அனைத்து மட்டத்திலும் மாற்றத்திற்கான காரணிகளாகச் செயல்படுவது அவசியம்.

நாம் மாற்றங்களைக் கொண்டு வரவேண்டிய தேவை உள்ளது. நாம் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தால் பரிசோதனைகள் மேற்கொள்வதை மறந்து விடுகிறோம். பரிசோதனைகள் செய்யாவிடில் நாம் எவ்வாறு மாற்றங்களைக் கொண்டு வர முடியும்? அதே போல் இடர்பாடு இல்லாத பரிசோதனை முயற்சிகளும் இல்லை. எனவே பரிசோதனைகளின் இடர்பாடுகள் குறித்து கவலைப்படத் தேவையில்லை.

எனவே நாம் பரிசோதனைகளில் ஈடுபடவில்லை எனில் நாம் செய்வது வெறும் வேலை என்பதாகவே முடிந்து போகும்.

நான் எப்பவுமே பரிசோதனைகளுக்கு வெகுமதி அளிப்பவன். வித்தியாசமாகப் பணியாற்றி பரிசோதனை செய்பவர்களுக்கு வித்தியாசமான திருப்தி கிடைக்கும்.

மூத்த அதிகாரிகள் இளம் அதிகாரிகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் இளம் பணியாளர்கள் வேறொரு தலைமுறையைச் சேர்ந்தவர்கள், அதனால் ஒரு பணியை நிறைவேற்றுவதற்கான பல சிறந்த வழிகள் இவர்களிடத்தில் இருக்கும்.

மாற்றத்திற்கான சீர்த்திருத்தம் என்ற மந்திரம் அரசு அதிகாரிகளால் செயல்திறத்துடன் கூடிய மாற்றத்துக்கான சீர்திருத்தம் என்று புதிய விளக்கம் அளித்துக் கொள்ளப்பட வேண்டும். அதாவது மூத்த அதிகாரிகள் தங்கள் அனுபவத்தையும் இளையோரின் திறமையையும் கலந்து நம்மால் செய்ய முடியாதது எதுவும் இல்லை என்ற நிலையை உறுதி செய்ய வேண்டும்.

ஒரு செயலை நிறைவேற்றும்போது தடைகள் பிரச்சினைகளைத் தோற்றுவிக்காது, மாறாக களைப்பே பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும். எனவே களைப்படையும் அணுகுமுறைகளை கைவிட வேண்டும்.

பொதுமக்களுடன் கலந்து செயல்படுவது, உரையாடுவது என்று செயல்பட்டால் அரசு ஊழியர்களுக்கு களைப்பும் சோர்வும் ஏற்படாது. குடிமைச் சமூகத்துடன் தொடர்பிலிருப்பது முக்கியம்.

குடிமைச் சமூகத்துடன் தொடர்பிலிருந்தால் அரசுத் திட்டங்கள் மக்களை எளிதில் சென்றடையும். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள செயலர்கள் கமிட்டி, தனிமைப்படுதலை வெற்றிகரமாக உடைத்துள்ளது. அவர்கள் மக்களுடன் நேரடியாகக் கலந்து செயல்பட 10,000 மனித மணி நேரத்தை அர்ப்பணித்துள்ளனர்.

ஒவ்வொருவரும் பங்களிப்பு செய்ய முடியும் சூழலை உருவாக்க வேண்டும். 125 கோடி மக்களின் ஆற்றலும் தேசத்தை முன்னோக்கி நகர்த்திச் செல்லும்.”

இவ்வாறு கூறினார் மோடி.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.