கிறிஸ்தவ தம்பதியர் பரஸ்பரம் சம்மதித்து விவாகரத்து பெறுவது தொடர்பாக சட்ட திருத்தம் 2 ஆண்டுகளில் இருந்து ஒரு ஆண்டாக மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது
பிரிந்து வாழும் காலம் குறைகிறது: கிறிஸ்தவ தம்பதியர் விவாகரத்து தொடர்பாக சட்ட திருத்தம் - மத்திய அரசு முடிவு
புதுடெல்லி :
கணவன்-மனைவி இருவரும் பரஸ்பரம் சம்மதித்து விவாகரத்து செய்ய வேண்டும் என்றால் தம்பதியர் ஓராண்டு பிரிந்திருக்க வேண்டும். இந்த நடைமுறை, இந்து விவாகரத்து சட்டம், பார்சி திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம், சிறப்பு திருமண சட்டம் ஆகியவற்றில் உள்ளது.
கிறிஸ்தவ தம்பதியர் பரஸ்பர சம்மதத்தின்கீழ் விவாகரத்து செய்துகொள்வதற்கு 2 ஆண்டுகள் பிரிந்து வாழ வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்படுகிறது.
ஆனால் ஒரு வழக்கு விசாரணையின்போது இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியது. அப்போது சுப்ரீம் கோர்ட்டு, “மற்ற மதத்தினர் ஓராண்டு பிரிந்து வாழ்ந்தால் போதும் என்கிறபோது, கிறிஸ்தவர்கள் மட்டும் 2 ஆண்டுகள் பிரிந்து வாழ வேண்டுமா? இதில் அர்த்தம் இல்லை. இது முழுக்க முழுக்க சட்டத்தின் கேள்வி. நீங்களே முடிவு செய்யுங்கள்” என்று மத்திய அரசிடம் கூறியது.
அதைத் தொடர்ந்து கிறிஸ்தவ தம்பதியர் பரஸ்பரம் சம்மதித்து விவாகரத்து செய்கிறபோது, அவர்களும் மற்ற மதத்தினரை போல ஓராண்டு பிரிந்து வாழ்ந்தால் போதும் என்ற வகையில், 1869-ம் ஆண்டு இயற்றிய விவாகரத்து சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு மத்திய சட்ட அமைச்சகம் முடிவு செய்து, மத்திய அமைச்சரவைக்கு குறிப்பு தயார் செய்து அனுப்பியது.
அது விரைவில் மத்திய அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு, பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. அது சட்டமாகி விட்டால் கிறிஸ்தவ தம்பதியரும் ஓராண்டு பிரிந்து வாழ்ந்தால், விவாகரத்து கோர வழி பிறக்கும்.a

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.