Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 23, 2016

ஒன்றைரை லட்சம் கோடிக்கும் அதிக மதிப்புள்ள தங்கத்தை பாதாள அறையில் பாதுகாத்து வரும் இங்கிலாந்து


இங்கிலாந்து  நாட்டில் உள்ள பாதாள அறையில் 5,134 டன் எடையுள்ள தங்க கட்டிகளை அந்நாட்டு அரசாங்கம் ரகசியமாக பாதுகாத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்து தலைநகரமான லண்டனில் உள்ள திரெட்நீடில்  சாலையில் ‘இங்கிலாந்து வங்கி (Bank of England) இயங்கி வருகிறது. இந்த வங்கி அமைந்துள்ள நிலப்பரப்பிற்கு கீழே உள்ள பாதாள அறைகளில் தான் 5,134 டன் எடையுள்ள தங்க கட்டிகள் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

உலகில் உள்ள ஒட்டுமொத்த தங்கத்தின் இருப்பை ஒப்பிடும்போது, இங்குள்ளது 5-ல் ஒரு பகுதி ஆகும். சுமார் 3 லட்சம் சதுரடி பரப்பளவில் உள்ள இந்த ரகசிய அறையில் உள்ள தங்கத்தின் ஒட்டுமொத்த மதிப்பு 172 பில்லியன் பவுண்ட் (16,51,389,99,35,220 ரூபாய்) ஆகும்.

இதுமட்டுமல்லாமல் லண்டன் நகர வீதிகளின் நிலப்பரப்பிற்கு கீழ் ஆங்காங்கு சுமார் 1,000 டன் எடைக்கும் அதிகமான தங்க கட்டிகளும் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 1930ம் ஆண்டுகளில் கட்டப்பட்ட இந்த ரகசிய பாதாள அறைகளுக்கு ஒரு சிலர் மட்டுமே செல்ல முடியும். அதுமட்டுமில்லாமல், இந்த அறைகளை திறப்பதற்கு குறிப்பிட்ட உயர் அதிகாரி ஒருவரின் ‘குரல் ஒலியும்’ மற்றும் 3 அடிகள் நீளமுள்ள சாவியும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த ரகசிய பாதாள அறையை பிரித்தானிய மகாராணியான இரண்டாம் எலிசபெத் இறுதியாக கடந்த 2012ம் ஆண்டு ஆய்வு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.