Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 5, 2016

பெண் மர்மசாவில் திருப்பம் : கொலை செய்ததாக பெற்றோர் வாக்குமூலம்


மண்டியாவில் மகளை கொலை செய்து சடலத்தை எரிக்க முயன்றதாக கைதான 3 பேரும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இது குறித்து மாவட்டம் எஸ்.பி சுதீஸ் கூறியதாவது; இளம் பெண் மோனிகா என்பவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறி, பெற்றோர் மற்றும் அவரது தாய் மாமா ஆகியோர் சேர்ந்து, சடலத்தை எரித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார் எலும்பு துண்டுகளை கைப்பற்றி பிரேத பரிசோதனை அனுப்பி வைத்து விசாரித்தோம். அப்போது அதில் இளம் பெண் தற்கொலை செய்து கொள்ளவில்லை கொலை செய்யப்பட்டிருப்பதாக சந்தேகம் எழுந்ததும். மேலும் மோனிகா எழுதியதாக கூறிய கடிதத்தை கைப்பற்றி விசாரித்தோம். அப்போது அதை யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் அவர் கடிதம் எழுதியிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக பெற்றோரிடம் விசாரித்தபோது, அவர்கள், மோனிகாவின் கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

தலித் மாணவரை காதலித்து ஓடி சென்றதால், அவமானம் தாங்க முடியாமல் ஆணவ கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர். விசாரணையில் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தந்தை மோகன், தாய் பாக்கியம்மா, தாய்மாமா சுரேஷ் ஆகியோரை கைது செய்துள்ளோம். அவர்கள் மீது கொலை மற்றும் சடலத்தை எரிக்க முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.