Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 23, 2016

மனிதர்களை போலவே பேசி பழகும் பெண் ரோபோவை உருவாக்கிய சீனா


மனிதர்களை போலவே பேசி பழகும் பெண் ரோபோவை வடிவமைத்து சீன விஞ்ஞானிகள் ஆச்சரியப்பட வைத்துள்ளனர்.

ரோபோக்கள் கண்டுபிடிப்பில் முன்னணியில் உள்ள சீனா தற்போது மனிதர்களுடன் உரையாடும் வகையில் பெண் ரோபோவை உருவாக்கியுள்ளது. 3 ஆண்டுகள் கடும் உழைப்பிற்கு பின் இந்த ரோபோவை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். சமீபத்தில் இந்த ரோபோவின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது மனிதர்களுடன் சகஜமாக பேசி அந்த ரோபோ அசத்தியுள்ளது. ரோபோவின் முக பாவங்கள், உடல் மற்றும் வாய் அசைவுகள் மனிதர்களை போன்று உருவாக்கப்பட்டுள்ளது.மேலும் ஐ கிளவுட் மூலம் தனது செயல்களை தானே தீர்மானிக்கும் வகையில் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளதாக அதன் கண்டுபிடிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.சீனாவின் அறிவியல் தொழில்நுட்ப பலகலைக்கழக்ம் இதனை உருவாக்கி உள்ளது. இந்த் ரோபோ  ஷாங்காயில் சர்வதேச தொழில் நுட்ப கண்காட்சியில்  இடம்பெற்று அனைத்து பார்வையாளர்களையும் அசத்தியது.இந்த ரோபோவுக்கு ஜியாஜியொ என் பெயரிட்டு உள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.