Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 28, 2016

விசாகப்பட்டினம் பயோ டீசல் ஆலையில் 2-வது நாளாக கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்


விசாகப்பட்டணத்தில் உள்ள பயோ டீசல் ஆலையில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டணம் அருகே உள்ள தவ்வடா சிறப்பு பொருளாதார மண்டலத்தில், ‘பயோமிக்ஸ் பியூவல்ஸ் லிமிடெட்’ என்ற பெயரில் பயோ டீசல் உற்பத்தி ஆலை உள்ளது. இங்கு பல்வேறு மூலப்பொருட்கள் மூலம் 5 லட்சம் டன் பயோ டீசல் உற்பத்தி செய்யப்படுகிறது.இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் பயோ டீசலை சேமித்து வைக்க தலா 3 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 18 ராட்சத தொட்டிகள் உள்ளன. இந்த தொட்டிகளில் 30 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை பயோ டீசல் சேமித்து வைக்கப்பட்டு இருந்தது.

இதில் ஒரு தொட்டியில் நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் அந்த தீ அருகில் உள்ள மற்ற தொட்டிகளுக்கும் வேகமாக பரவியது. இதனால் ஆலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.தொட்டிகளில் இருந்த பயோ டீசல் பற்றி எரிந்ததால் பல அடி உயரத்துக்கு தீ ஜுவாலைகள் கொழுந்து விட்டு எரிந்தன. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

இந்த சம்பவத்தின் போது ஆலையில் சுமார் 200 ஊழியர்கள் பணியில் இருந்தனர். தீ விபத்து குறித்த தகவல் அறிந்ததும் அவர்கள் அனைவரும் ஆலையை விட்டு வேகமாக வெளியேறினர். எனினும் 2 ஊழியர்கள் காயமடைந்தனர். அவர்கள் இருவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விசாகப்பட்டணம் இரும்பு ஆலை, துறைமுக பொறுப்புக்கழகம், இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் இருந்து தீயணைக்கும் நுரை கொண்ட 40 எந்திரங்களுடன் வண்டிகள் கொண்டு வரப்பட்டன. மூன்றாவது நாளாக  தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் தீயை கட்டுப்படுத்த அவர்கள் போராடி வருகின்றனர்.இந்த தீ விபத்தில் சுமார் ரூ.200 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு இருக்கும் என நம்பப்படுகிறது. இந்த சம்பவத்துக்கான காரணம் குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.