Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 29, 2016

ரூ 2.ஆயிரம் கோடி போதை மருந்து பதுக்கல் பிரபல நடிகையின் கணவருக்கு தொடர்பு


மராட்டிய மாநிலம் தானேயில் கோலாப்பூர் என்ற இடத்தில் மராட்டிய மாநில போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஒரு மருந்து தயாரிப்பு குடோனில் அதிரடி சோதனை நடத்தி னார்கள்.

அப்போது அந்த மருந்து குடோனில் மருந்து பொருட்களுக்கு மத்தியில் போதை பொருளும் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து வகை மருந்துகளையும் ஆய்வு செய்தனர். இதில் 21 டன் எடையுள்ள கொடிய போதை மருந்து கைப்பற்றப்பட்டது. அதன் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.2 ஆயிரம் கோடியாகும். இந்த அளவுக்கு போதை பொருள் பதுக்கப்பட்டு இருப்பதை அறிந்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதில் சர்வதேச கடத்தல் கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நைஜீரிய கடத்தல்காரன் சிப்ரன் சினஸ்சா உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டதாக தானே போலீஸ் கமிஷனர் பரம்பீர்சிங் தெரிவித்தார். இது நாட்டிலேயே மிகப் பெரிய போதை பொருள் வேட்டையாகும்.கைதானவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகை மம்தா குல்கர்னி அவரது கணவரான கென் பாவைச் சேர்ந்த விக்கி கோஸ்வாமி ஆகியோருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது.

இந்த போதை பொருள் கடத்தல் தொடர்பாக தலை மறைவாக இருக்கும் மேலும் 4 பேரை தேடி வருகிறார்கள். மராட்டியம் மற்றும் குஜராத் மாநில போலீசார் கூட்டாக வேட்டையில் ஈடு பட்டுள்ளனர். அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்த அமலாக் கப்பிரிவு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். விசாரணைக்குப் பின் இருவரும் போலீசில் சிக்குவார்கள் என தெரிகிறது

இதே போல் மமதா குல்கர்னியின் கணவர் போதை மருந்து கடத்தல் குற்றத்திற்காக கடந்த 2014 ஆம் ஆண்டு கைது செய்யபட்டு பின்ன்னர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்..

இந்த நிலையில்  முதல் முறையாக நடிகை மம்தா குல்கர்னி தனது கணவர் கைதுக்கு  வாய் திறந்து உள்ளார். அவர் தனது கணவரை தயவு செய்து தனியாக விடும்படி கூறி உள்ளார்.இந்த போதை மருந்து பதுக்கலில் தனது கணவருக்கு தொடர்பு இருப்பதை மறுத்து உள்ளார். மேலும் அவர் கூறியதாவது:-

தனது கணவர் கைது குறித்து விளக்கமளித்த அவர் குடும்ப பிரச்சினை காரணமாக கைது செய்யபட்டார். பின்னர் 2 மாதங்களில் அவர் விடுதலை செய்யபட்டார்.  விக்கி சிறைக்கு சென்றது செய்தியானது. அமெரிக்க மற்றும் பிற ஏஜெண்டுகள் எனக்கு பின்னால் இருந்தனர்.இப்போது சொல்கிறேன் அவர் 2 மாதத்தில் வெளியே வந்து விட்டார்.

அவரது கைதுக்கு காரணம் போதை மருந்து கடத்தல் என கூறப்பட்டது அது உண்மையில்லை மாறாக அது குடும்ப தகராறாக இருந்தது. ஆனால் இதில் விக்கி இழுக்கபட்டு உள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.