கெய்ட்டோ,
ஈக்வடாரை 7.8 ரிக்டர் அளவுக்கொண்ட பயங்கர பூகம்பம் உலுக்கியதில் 28 பேர் உயிரிழந்தனர். அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
ஈக்வடாரில் இன்று 7.8 ரிக்டர் அளவுக்கொண்ட பயங்கர பூகம்பம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. நிலநடுக்கம் தலைநகர் குயிடோவை உலுக்கியது. கடல்பகுதியை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து உள்ளூர் கடல்பகுதியை ஒட்டிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. ”ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவை பார்க்கையில் 300 கிலோ மிட்டர் தொலைவிற்கு அதிபயங்கர சுனாமி ஏற்படலாம்,” என்று பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
குயிடோவில் இருந்து சுமார் 173 கிலோ மீட்டர் மேற்கு-வடமேற்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. முயிஸ்னேவில் இருந்து 28 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டு உள்ளது. முயிஸ்னேவில் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கிஉள்ளது. அங்கு ஏற்பட்ட சேதம் தொடர்பான தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை... சுமார் 11 நிமிடங்கள் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. முதலாவது 4.8 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. பின்னர் 7.8 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
நிலநடுக்கமானது வடக்கு பெருவிலும் உணரப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.
ஜப்பானின் குமாமோட்டோ பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். ஜப்பானில் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளநிலையில் ஈக்வடாரை நிலநடுக்கம் தாக்கி உள்ளது. முன்னதாக பாகிஸ்தானில் 7.1 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டதில் 6 பேர் உயிரிழந்தனர் என்பது நினைவுக்கூரத்தக்கது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.