Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 16, 2016

முழு PF பணம் எடுக்கணுமா ? இன்னும் 2 வாரம் தான் அவகாசம் : இல்லாவிட்டால் 58 வயதில் தான் கிடைக்கும்


புதுடெல்லி: நிறுவனத்தில் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு மேல் வேலையில்லாமல் இருந்தால் பிஎப் பணம் முழுமையாக எடுக்க இன்னும் 2 வாரம்தான் அவகாசம் உள்ளது. அதன்பிறகு புது விதிமுறை அமலாகிறது. தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தில் 12 சதவீதம் வருங்கால வைப்பு நிதிக்காக பிடித்தம் செய்யப்படுகிறது. இதே அளவு தொகையை ஊழியர்களின் கணக்கில் முதலாளிகளின் பங்காக நிறுவனங்கள் செலுத்த வேண்டும். இதில் 8.3 சதவீதம் பென்ஷன் திட்டத்துக்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது. எஞ்சிய தொகை தொழிலாளர்களின் கணக்கில் சேர்க்கப்பட்டு ஆண்டுதோறும் வட்டி சேர்க்கப்பட்டு வருகிறது. தற்போது 8.8 சதவீதம் அளவுக்கு வட்டி தரப்படுகிறது.

 58 வயது பூர்த்தியானவுடன் வைப்பு நிதியில் சேர்ந்த தொகை மொத்தமாக ஊழியர்களுக்கு தரப்படும். பணிக்காலத்தில் இந்த வைப்பு நிதியிலிருந்து குழந்தைகளின் படிப்பு, மருத்துவ செலவு, திருமண செலவுகளுக்கு பணம் திருப்பிக் கொள்ளலாம்.54 வயதை கடக்கும் போது வைப்பு நிதியில் இருந்து 90 சதவீத தொகையை எடுத்துக் கொள்ளலாம் என விதிமுறை இருந்தது. இந்த விதிமுறை கடந்த பிப்ரவரியில் திருத்தப்பட்டது. இனிமேல் 57 வயது எட்டினால் மட்டுமே 90 சதவீத நிதியை திரும்ப பெற முடியும். 58 வயது பூர்த்தியானவுடன் எஞ்சிய தொகை ெசட்டில் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பழைய விதிமுறையின்படி, ஒரு ஊழியர் நிறுவனத்தில் இருந்து விலகி இரண்டு மாதங்களுக்கு மேல் வேலையில்லாமல் இருந்தால் முழு பிஎப் பணத்தையும் எடுக்கலாம்.

இது வரும் 30ம் தேதி வரை மட்டும்தான். அடுத்த மாதம் 1ம் தேதியில் இருந்து புது விதிமுறை அமலுக்கு வருகிறது. அதன்பிறகு 58 வயது பூர்த்தியான பிறகுதான் முழு பிஎப் பணத்தையும் எடுக்க முடியும்.  பிஎப் பணத்தில் இருந்து அத்தியாவசிய தேவைக்கு பணம் எடுப்பது மிக உதவியாக இருந்தாலும், ஓய்வு பெற்ற பிறகு அந்த ஊழியருக்கு சமூக பாதுகாப்பு இல்லாமல் போய்விடுகிறது. சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில்தான் விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.