Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 23, 2016

இந்தியா கால் சென்டர்களை கேலி செய்யும் அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப்


வாஷிங்டன்

வரும் நவம்பர் 8-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கிறது. இதையொட்டி ஆளும் ஜனநாயக கட்சி, குடியரசு கட்சியில் அதிபர் வேட்பாளரை தேர்வு செய்ய உட்கட்சித் தேர்தல் நடக்கிறது.

ஜனநாயக கட்சியில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுக்கும் செனட்டர் பெர்னி சாண்டர்ஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. குடியரசு கட்சியில் தொழிலதிபர் டொனால்டு டிரம்ப் முன்னிலையில் உள்ளார்.

டொனால்டு டிரம்ப் இந்தியாவின் கால்சென்டர்களை கேலி செய்து உள்ளார். அதே நேரம் இந்தியா ஒரு பெரியா நாடு இந்திய தலைவ்ர்கள் மீது எனக்கு கோபமில்லை.நான் நமது தலைவர்கள் மீதுதான் வருத்தமாக உள்ளேன் என கூறி உள்ளார்.
அமெரிக்காவின் உள்நாட்டு வேலைவாய்ப்புகள் எல்லாம் இந்தியா போன்ற வெளிநாடுகளுக்கு தாரைவார்க்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.

எனக்கு சீனாமீது கோபமில்லை,  நெனக்கு ஜப்பான் நாட்டின் மீது கோபமில்லை, எனக்கு வியட்நாமுடன் கோபமில்லை இந்தியா உள்பட எந்த நாடுகள் மீதும் கோபமில்லை என கூறினார்

மேலும் கூறும் போது செனட்டர் பெர்னிக்கு எதிராக நான் போட்டியிட விரும்பவில்லை. ஹிலாரியை எதிர்த்துப் போட்டியிட வேண்டும், அவரை படுதோல்வி அடையச் செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பம். நான் அதிபராக பதவியேற்றால் மெக்ஸிகோவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் ஊடுருபவர்களைத் தடுக்க எல்லையில் சுற்றுச்சுவர் எழுப்பப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.