Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 12, 2016

வர்ணனையாளர் குழுவில் இருந்து ஹர்ஷா போக்ளே நீக்கப்பட்டதற்கு தோனி காரணமா?


கிரிக்கெட் வர்ணனையின் மூலம் புகழ் பெற்றவர் ஹர்ஷா போக்ளே. ஐ.பி.எல். போட்டியின் தொடக்க ஆண்டு முதலே அவர் வர்ணனையாளராக இருந்து வந்தார்.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி தொடங்குவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு ஹார்ஷா போக்ளேவின் ஐ.பி.எல். வர்ணனையாளர் ஒப்பந்தம் திடீரென ரத்து செய்யப்பட்டது. ஹார்ஷா போக்ளே நீக்கத்துக்கான காரணத்தை இந்திய கிரிக்கெட் வாரியமோ, ஐ.பி.எல். அமைப்போ இதுவரை தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், அண்மையில் நடந்து முடிந்த  20 ஓவர் உலக கோப்பை போட்டியில் வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது ஹார்ஷா போக்ளே வங்காளதேச அணி வீரர்கள் குறித்து வர்ணனையில் அதிகம் பாராட்டி பேசியதாக சர்ச்சை எழுந்தது. இது குறித்து இந்தி நடிகர் அமிதாப்பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் மறமுகமாக சுட்டிக்காட்டி இருந்தார்.

 இந்த கருத்தை தானும் ஆமோதிப்பதாக இந்திய அணியின் கேப்டன் டோனி சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து இருந்தார்.  இந்த சர்ச்சையால் தான் ஹார்ஷா போக்ளே நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.