உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத்தைச் சேர்ந்தவர் பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) நரேந்திரா காஷ்யப். இவரது மகன் சாகர். மருமகள் ஹிமான்ஷி (29). ஹிமான்ஷி, பிஎஸ்பி முன்னாள் அமைச்சர் ஹிராலால் காஷ்யப்பின் மகளாவார். ஹிமான்ஷிக்கும் சாகருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் குளியலறையில் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஹிமான்ஷி மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதையடுத்து, 498ஏ, 304பி ஆகிய குற்றப்பிரிவுகளின்கீழ் எம்.பி, நரேந்திரா காஷ்யப், அவரது மனைவி, மகன்கள் சாகர், சித்தார்த், மகள்கள் ஷோபா, சரிதா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், கொலையா, தற்கொலையா என விசாரண மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், நெஞ்சு வலி காரணமாக நேற்று முன்தினம் யசோதா மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த எம்.பி நரேந்திரா காஷ்யப், அவரது மனைவி தேவேதரி ஆகிய இருவரையும் கவி நகர் போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். மேலும் மர்மமான முறையில் இறந்துபோன ஹிமான்ஷியின் கணவரும், எம்.பியின் மகனுமான சாகரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். வரதட்சணை கொடுமை காரணமாக ஹிமான்ஷி இறந்திருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் சந்தேகம் எழுந்துள்ளதால், வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் 3 பேரையும் கைது செய்துள்ளதாக போலீசார் தகவல் அளித்துள்ளனர்.எம்.பி நரேந்திரா காஷ்யப் மற்றும் அவரது மனைவியின் உடல் நிலையை தீவிரமாக பரிசோதனை செய்த பின்னர், கைது நடவடிக்கை மேற்கொண்டோம் என கவிநகர் போலீஸ் அதிகாரி அசோக் சிசோடியா கூறினார். எம்.பியின் மற்றொரு மகன் சித்தார்த் மற்றும் இரண்டு மகள்களையும் விரைவில் கைது செய்யப் போவதாக அவர் மேலும் கூறினார்.
எம்.பியின் மருமகள் மர்மமான முறையில் இறந்தது பற்றியும், நரேந்திரா காஷ்யப் கைது பற்றியும் மாநிலங்களவை தலைவருக்கு விரிவான தகவல் அனுப்பி உள்ளோம் என மாவட்ட கலெக்டர் விமல் சர்மா தகவல் அளித்தார்.போதுமான வரதட்சணை கொண்டுவரவில்லை என ஹிமான்ஷியை நரேந்திரா காஷ்யப் குடும்பத்தினர் அடித்து, உதைத்து துன்புறுத்தி வந்தனர் என்றும், ‘டொயோட்டா பார்ச்சூனர்’, சொகுசு கார் வாங்கி வரவேண்டும் என்று கொடுமைப்படுத்தியதாகவும் அவரது மாமா ஹரிஓம் காஷ்யப், போலீசில் புகார் அளித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.