Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 13, 2016

கம்ப்யூட்டர் நிறுவன பெண் ஊழியர் கொலை: ‘வயதில் சிறியவன் என்று திருமணம் செய்ய மறுத்ததால் கொலை செய்தேன்’ கைதான காதலன் வாக்குமூலம்


கம்ப்யூட்டர் நிறுவன பெண் ஊழியர் கொலையில் கைதான காதலன், வயதில் சிறியவன் என்று திருமணம் செய்ய மறுத்ததால் கொலை செய்ததாக போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

பெண் படுகொலை
சென்னை துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வினோதினி(வயது 23). தரமணியில் உள்ள ஒரு தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். பெற்றோர் இல்லாத அவர் தன்னுடைய உறவினர் வீட்டில் வசித்துவந்தார். அவருடன் வேலை பார்த்து வந்த 18 வயது வாலிபருக்கும், வினோதினிக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்தனர்.

இதுபற்றி தகவலறிந்த வினோதினியின் உறவினர்கள் அவரை பாரிமுனை மண்ணடி பகுதியில் உள்ள அவருடைய பாட்டி வீட்டிற்கு அனுப்பிவைத்தனர். அப்போதும் இருவரும் காதலை தொடர்ந்த நிலையில், காதலன் தன்னைவிட வயதில் சிறியவன் என்பது வினோதினிக்கு தெரியவந்தது. இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வினோதினி காதலனை புறக்கணித்து வந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர் நேற்று முன்தினம் மாலை வினோதினியை மண்ணடி பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

வயதில் சிறியவன்
இந்த கொலை தொடர்பாக வடக்கு கடற்கரை போலீசார் வழக்குபதிவு செய்து தப்பிச்சென்ற காதலனை கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் கொலை குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அவருடைய வாக்குமூலம் வருமாறு:–

நானும் வினோதினியும் கடந்த ஒரு ஆண்டு காலமாக காதலித்து வந்தோம். இருவரும் ஒருவர் மீது ஒருவர் உயிராக இருந்தோம். பல இடங்களில் இருவரும் தனியாக சுற்றித்திரிந்தோம். 3 மாதங்களுக்கு முன்பு நான் வினோதினியை விட சிறியவன் என்பது அவளுக்கு தெரியவந்தது.

திருமணம் செய்ய மறுப்பு
அப்போது முதல் எங்களுக்குள் விரிசல் ஏற்பட்டது. நான் பலமுறை அவளிடம் பேசவும், பார்க்கவும் முயன்றபோது அவள் என்னை புறக்கணித்து வந்தாள். நேற்று முன்தினம் மாலை நாங்கள் வழக்கமாக சந்திக்கும் இடத்திற்கு அவளை வரச்சொன்னேன். அங்கு அவள் வந்ததும் என்னை ஏன் புறக்கணிக்கிறாய்? நாம் திருமணம் செய்து கொள்ளலாம்? என கூறினேன்.

என்னை விட சிறியவனை திருமணம் செய்துகொண்டால் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்? தரக்குறைவாக பேசுவார்கள்? என்று கூறினாள். காதலித்து சுற்றும்போது நம்மை பேசாதவர்கள் திருமணம் செய்தால் ஏன் பேசப்போகிறார்கள்? என்று கேட்டேன். ஆனாலும் அவள் தொடர்ந்து என்னை புறக்கணித்து வந்ததால் ஆத்திரத்தில் அவளை அடித்தேன். அப்போது அவள் மயங்கி விழுந்தாள்.

கொலை செய்தேன்
உடனடியாக அவளை அருகில் இருந்த கழிவறைக்கு தூக்கிச் சென்று கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை அங்கேயே போட்டுவிட்டு சென்றுவிட்டேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

அவர் மீது வழக்குபதிவு செய்த போலீசார், அவரை ஜார்ஜ்டவுன் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பிவைத்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.