Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 26, 2016

நட்சத்திர ஓட்டலில் கல்லூரி மாணவியை கற்பழித்து கொல்ல முயன்ற மாணவர் கைது குஜராத்தில் சிக்கினார்


மும்பை நட்சத்திர ஓட்டலில் கல்லூரி மாணவியை கற்பழித்து கொல்ல முயன்ற மாணவரை குஜராத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

மாணவி கற்பழிப்பு
மும்பை தார்டுதேவ் பகுதியை சேர்ந்தவர் தேசாய். இவரது மகன் குணால்(வயது19). அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இந்தநிலையில் குணால் தன்னுடன் கல்லூரியில் பயிலும் தோழியான தாதரை சேர்ந்த 17 வயது மாணவியை கடந்த சில தினங்களுக்கு முன்பு சந்தித்தார். அப்போது மாணவியிடம் பேச விரும்புவதாக கூறி, கிராண்ட்ரோட்டில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்து சென்றார்.

பின்னர் மாணவியை தனது ஆசைக்கு இணங்கும் படி கூறியுள்ளார். மேலும் மாணவியை மிரட்டி அங்குள்ள அறையில் கற்பழித்து உள்ளார். இந்தநிலையில் மாணவி அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்தார்.

கைது
இதனால் ஆத்திரம் அடைந்த குணால் தான் வைத்திருந்த கயிற்றால் மாணவியின் கழுத்தை நெரித்ததால் மாணவி மயங்கி விழுந்தார். இதனை கண்ட குணால் மாணவி இறந்து விட்டதாக கருதி அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இந்த சம்பவம் குறித்து காம்தேவி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி சென்ற குணாலை பிடிக்க விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில், குஜராத் மாநிலம் பரோடாவில் குணால் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

அதன்பேரில் போலீஸ் குழுவினர் அங்கு சென்று உள்ளூர் போலீசாரின் உதவியுடன், தனியார் ஓட்டலில் தங்கி இருந்த குணாலை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை நேற்று முன்தினம் மும்பை கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.