அன்னவாசல் அருகே அடைகாக்காமல் முட்டையில் இருந்து கோழி குஞ்சு வந்த அதிசயம் நடந்துள்ளது. இதை ஆச்சரியத்துடன் அப்பகுதி பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர்.
கோழி குஞ்சு
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே முக்கண்ணாமலைப்பட்டியை சேர்ந்தவர் அபுபக்கர் சித்திக். இவர் தனது வீட்டில் ஒரு கோழி வளர்த்து வருகிறார். இந்நிலையில் இந்த கோழி கடந்த பதினைந்து தினங்களாக தொடர்ந்து முட்டையிட்டு வந்தது. அந்த முட்டைகளை அபுபக்கர் சித்திக் தனது வீட்டில் உள்ள ஒரு அலமாரியில் சேமித்து வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று அந்த அலமாரியில் இருந்து கோழி குஞ்சின் சத்தம் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து அந்த அலமாரியை திறந்து பார்த்த அபுபக்கர் சித்திக் அதிர்ந்து போனார்.
ஏராளமான பொதுமக்கள்
அவர் சேமித்து வைத்திருந்த ஒரு முட்டையிலிருந்து ஒரு குஞ்சு வெளியில் வந்து கத்திக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அடை வைக்கப்படாமல் கோழி குஞ்சு எப்படி வந்தது என திகைத்து போனார். இது குறித்து கேள்விப்பட்ட அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் அந்த கோழிகுஞ்சை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
இது குறித்து அந்த பகுதியில் கோழிப்பண்ணை வைத்து இருக்கும் ஒருவர் கூறுகையில், ‘‘வெப்பத்தில் கோழிமுட்டை பொரிக்க வாய்ப்பு உள்ளது’’. தற்போது புதுக்கோட்டை பகுதியில் 102 டிகிரிக்கு மேல் வெயில் அடித்து வருகிறது.அதனால் ஏற்பட்ட அதிக வெப்பத்தில் கோழி அடை காக்காமலேயே முட்டை பொரித்து குஞ்சு வெளிவந்துள்ளது என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.