வங்கி மோசடி வழக்கில் தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு, ஜாமீனில் வர முடியாத கைது வாரண்டை மும்பை கோர்ட்டு பிறப்பித்து உள்ளது.
வங்கி கடன் மோசடி
பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, பல்வேறு பொதுத்துறை வங்கிகள் உள்பட 18 வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்தவில்லை. இதைத்தொடர்ந்து, அந்த வங்கிகள் அளித்த புகாரின் பேரில் அவர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், அவர் கடந்த மாதம் 2–ந் தேதி இங்கிலாந்துக்கு சென்று விட்டார்.
சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் மத்திய அமலாக்க துறையும் இந்த மோசடி குறித்து விசாரணை நடத்தி வருகிறது.
அமலாக்க துறை சம்மன்
விசாரணைக்காக ஆஜராகுமாறு விஜய் மல்லையாவுக்கு அமலாக்க துறை 3 முறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகவில்லை. தனக்கு பல்வேறு பணிகள் இருப்பதால், விசாரணைக்காக ஆஜராக மே மாதம் வரை காலஅவகாசம் அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.
அமலாக்க பிரிவு இயக்குனரகத்தின் கோரிக்கையை ஏற்று, வெளியுறவுத்துறை அமைச்சகம் விஜய் மல்லையாவின் சிறப்பு பாஸ்போர்ட்டை 4 வாரங்களுக்கு முடக்கி வைத்து உள்ளது.
ரூ.900 கோடி கடன்
ரூ.900 கோடி கடன் வாங்கி மோசடி செய்து விட்டதாக விஜய் மல்லையா மீது, சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் மும்பை சிறப்பு கோர்ட்டில் ஐ.டி.பி.ஐ. வங்கியின் சார்பில் ஒரு வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
இந்த வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்த போது அமலாக்க துறையின் சார்பில் ஆஜரான வக்கீல் வாதாடுகையில், விஜய் மல்லையாவின் கிங்பிஷர் விமான போக்குவரத்து நிறுவனத்துக்காக வாங்கிய ரூ.900 கோடி கடன் தொகையில் ரூ.430 கோடியை வெளிநாடுகளில் சொத்துகள் வாங்க பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினார்.
அத்துடன் இந்த வழக்கில் விஜய் மல்லையாவுக்கு, ஜாமீனில் வெளிவரமுடியாத கைது வாரண்டை பிறப்பிக்க வேண்டும் என்றும் அமலாக்க பிரிவின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
கைது வாரண்டு
ஆனால் கிங்பிஷர் விமான போக்குவரத்து நிறுவனம், அமலாக்க துறையின் இந்த குற்றச்சாட்டை மறுத்து உள்ளது.
இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்க துறையின் கோரிக்கையை ஏற்று, விஜய் மல்லையாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்டை பிறப்பித்து நீதிபதி பி.ஆர்.பாவ்கே நேற்று உத்தரவிட்டார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.