இந்த விவாகரம் தொடர்பாக தனது மவுனத்தை கலைத்து ஒரு விளக்க அறிக்கையை நடிகர் அமிதாப் பச்சன் வெளியிட்டுள்ளார்.
பல்வேறு நாடுகளின் முக்கிய பிரமுகர்கள் கணக்கில் வராத சொத்துகளை மத்திய அமெரிக்க நாடான பனாமா மற்றும் உலக நாடுகள் பலவற்றில் ரகசியமாக தொழில் முதலீடு செய்து இருப்பதாகவும், வங்கிகளில் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாகவும் சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பு ‘பனாமா ஆவணங்கள்’ என்ற பெயரில் பரபரப்பு தகவல்களை வெளியிட்டது.
கடந்த 40 ஆண்டுகளில் மட்டும் 2 லட்சத்து 14 ஆயிரம் நிறுவனங்களில் இதுபோல் முதலீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்கு ஆதாரமாக 1 கோடியே 15 லட்சம் வரி ஆவணங்கள் வெளியிடப்பட்டு உள்ளது.
இதில் அமிதாப்பச்சன் 1993–ம் ஆண்டு 4 நிறுவனங்களின் இயக்குனராக நியமிக்கப்பட்டதாகவும் இதேபோல் 2005–ம் ஆண்டு நடிகை ஐஸ்வர்யா ராயும் அவருடைய குடும்ப உறுப்பினர்களும் அமிக் பார்ட்னர்ஸ் என்ற நிறுவனத்தில் இயக்குனர்களாக பதிவு செய்யப்பட்டதாகவும், தகவல் வெளியாகி இருக்கிறது. பனாமா ஆவணங்களில் இந்தியர்களின் பெயர்கள் அதிக அளவில் இடம் பெற்றிருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து மத்திய நேரடி வரிகள் வாரியம், ரிசர்வ் வங்கி, நிதி புலனாய்வு அமைப்பு, வெளிநாட்டு வரிகள் மற்றும் வரிகள் ஆய்வுத்துறையினர் கொண்ட குழு ஒன்றை அமைத்து இதுபற்றி தீவிரமாக விசாரிக்கும்படி பிரதமர் உத்தரவிட்டார்.
இந்நிலையில் மவுனம் காத்து வந்த நடிகர் அமிதாப் பச்சன் தனது மவுனத்தை கலைத்து ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
என்னுடைய பெயர் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. நான் வரிகளை ஒழுங்காகச் செலுத்தியுள்ளேன். வெளிநாடுகளில் செலவழித்த தொகைக்கும் நான் வரி செலுத்தியே வந்துள்ளேன். வெளிநாட்டுக்கு நான் அனுப்பிய தொகைகளுக்கும் நான் வரியையும் செலுத்தியுள்ளேன். எந்த நிறுவனங்களிலும் நான் இயக்குனராக நான் இருந்ததில்லை. என்னுடைய பெயர் தவறாகப் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.
பனாமா உள்ளிட்ட சில நாடுகளில் ரகசிய தொழில் முதலீடு செய்து இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவலை நடிகை ஐஸ்வர்யா ராய் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.