சாராயம் கடத்தல் எதிரொலியாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சாராய கடைக்கு சீல் வைத்தனர்.
சாராயம் கடத்தல்
புதுவை சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. மேலும் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கிருமாம்பாக்கம் போலீசார் பிள்ளையார்குப்பம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்த கன்னியக்கோவிலை சேர்ந்த அருள் (வயது 29) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 75 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் நரம்பையில் உள்ள சாராயக் கடையில் வாங்கி, கடத்தி வந்தது தெரியவந்தது.
சீல் வைப்பு
இதுபற்றி தேர்தல் பறக்கும் படைக்கு போலீசார் தெரிவித்தனர். அதன்பேரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி குமரன் தலைமையிலான அலுவலர்கள் நரம்பையில் உள்ள ஒரு சாராய கடைக்கு சென்று விசாரணை நடத்தினர். தேர்தல் விதிமுறையை மீறி ஒரே நபருக்கு அதிகளவு சாராயம் விற்றது தொடர்பாக அந்த சாராய கடையின் உரிமத்தை ரத்து செய்தனர். மேலும் அந்த கடையில் இருந்த 900 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து, கடைக்கு சீல் வைத்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.