Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 19, 2016

விமான ஆணையத்தில் என்ஜினீயர்களுக்கு பணி


விமான ஆணையத்தில் அதிகாரி பணிக்கு 220 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். என்ஜினீயரிங் பட்டதாரிகள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய விவரம் வருமாறு:–

இந்திய விமான ஆணையம் சுருக்கமாக ஏ.ஏ.ஐ. என குறிப்பிடப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் ஜூனியர் எக்சிகியூட்டிவ் பணியில் என்ஜினீயரிங் பட்டதாரிகளை நியமிக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 220 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். என்ஜினீயரிங் பிரிவு வாரியாக சிவில் பிரிவுக்கு – 50 இடங்களும், எலக்ட்ரிக்கல் – 50 இடங்களும், ஐ.டி.– 20 இடங்களும், ஏர்போர்ட் ஆபரேஷன்ஸ் அதிகாரி பணிக்கு 100 இடங்களும் உள்ளன.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரம் வருமாறு...

வயது வரம்பு:

பொதுப் பிரிவு விண்ணப்பதாரர்கள் 31–5–2016 தேதியில் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 32 வயதுடையவர்களாக இருந்தாலும், ஓ.பி.சி. பிரிவினர் 30 வயதுடையவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

கல்வித்தகுதி:

என்ஜினீயரிங்/ டெக்னாலஜி துறைகளில் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் சிவில், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி. பிரிவில் படித்தவர்களாக இருக்க வேண்டும். ஏர்போர்ட் ஆபரேசன்ஸ் பணியிடங்களுக்கு எம்.பி.ஏ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

கட்டணம் :

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.1000 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மாற்றுத் திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 17–5–2016–ந் தேதிக்குள் விண்ணப்பம் சென்றடைய வேண்டும்.

இது பற்றிய விரிவான விவரங்களை   www.aaiaero   என்ற இணையதளத்தில் பார்க்கவும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.