2 ஆண்டுகளுக்கு பிறகு கருணாநிதியுடன், நடிகை குஷ்பு சந்தித்து பேசினார். பிரசாரம் தொடங்குவதற்கு முன்பு ஆசி பெற்றதாக பேட்டி அளித்தார்.
‘திடீர்’ சந்திப்பு
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித்தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு தி.மு.க. தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் நேற்று மாலை சந்தித்து பேசினார். மாலை 5.38 மணிக்கு கருணாநிதி வீட்டுக்குள் சென்ற குஷ்பு மாலை 6.05 மணியளவில் வெளியே வந்தார்.
அப்போது குஷ்பு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–
அரசியல் சொல்லி கொடுத்தவர்
கேள்வி:– கருணாநிதியுடனான சந்திப்பு குறித்து சொல்லுங்கள்...
பதில்:– எப்போதும் நான் சொல்வது போல, எனக்கு தலைவர்(கருணாநிதி) மீது மரியாதை இருக்கிறது. எப்போதும் அது குறையாது. இடையில் ஏதோ ஒரு நிகழ்ச்சியில் அவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தாலும், வேறு கட்சியில் இருந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துள்ளேன். தலைவருடனான சந்திப்பு மகிழ்ச்சியாக இருந்தது.
நான் தி.மு.க.வில் சேர்ந்தபோது (2010–ம் ஆண்டு) எனக்கு அரசியல் தெரியாது. அரசியலில் எல்லாம் சொல்லி கொடுத்தவர் தலைவர் தான். அவர் நாளை மறுதினம் பிரசாரம் தொடங்குகிறார். நானும் பிரசாரம் தொடங்க உள்ளேன். அப்புறம் இருவரும் பிசியாகிவிடுவோம். எனவே அவரை தற்போது சந்தித்துள்ளேன்.
கேள்வி:– கருணாநிதி உங்களிடம் என்ன பேசினார்?
பதில்:– சந்தோஷப்பட்டார். எப்படி இருக்கீங்க? என்று கேட்டார். ஆசிர்வாதம் வழங்கினார்.
கருணாநிதியிடம் மாற்றம் இல்லை
கேள்வி:– நீங்கள் தி.மு.க.வில் இருந்த போதும், இப்போது கருணாநிதியை சந்திப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதா?
பதில்:– வித்தியாசம் இல்லை. அப்போது போன்று தான் இப்போதும் அவர் இருக்கிறார். எந்த மாற்றமும் இல்லை.
கேள்வி:– காங்கிரஸ் 2–வது கட்ட வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியிடப்படும்?
பதில்:– காங்கிரஸ் கட்சியில் 41 தொகுதிகளில் மீதமுள்ள 8 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் நாளை(இன்று) வெளியிடப்படுகிறது.
கேள்வி:– உங்களுடைய பெயரை வேட்பாளர் பட்டியலில் எதிர்பார்க்கலாமா?
பதில்:– எனக்கு எதிர்பார்ப்புகள் இருந்தது இல்லை. நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். அன்னை சோனியாகாந்தி, ராகுல்காந்தி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோருடைய முடிவு தான் என்னுடைய முடிவு.
2 நாளில் பிரசாரம்
கேள்வி:– தேர்தல் பிரசாரத்தை எப்போது தொடங்க உள்ளீர்கள்?
பதில்:– 2 நாளில் பிரசார பயண திட்டத்தை வகுத்து தொடங்குவேன்.
கேள்வி:– எதை முன்னிருத்தி பிரசாரத்தில் ஈடுபடுவீர்கள்?
பதில்:– 2011–ம் ஆண்டு அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வாய் கூசாமல் ஜெயலலிதா பொய் சொல்கிறார்.
‘சொன்னீங்களே... செஞ்சீங்களா...’ என்று தான் நாங்கள் கேட்கிறோம். தேர்தல் அறிக்கையில் கூறிய ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்கிறார். 5 ஆண்டுகளில் என்ன செய்தீர்கள்?. தேர்தலில் தமிழக மக்கள் தெளிவாக பதில் சொல்வார்கள். தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்.
கேள்வி:– ஜெயலலிதா பிரசார கூட்டத்தில் 3 பேர் பலியாகி உள்ளனரே?
பதில்:– யார் உயிரிழந்தாலும் கவலை இல்லாமல் ஜெயலலிதா பிரசாரத்தை தொடர்ந்து வருகிறார். இறந்தவர்களுக்கு ஆறுதலும், இரங்கலும் கூட சொல்லவில்லை. தான் பேசும் மேடையில் மட்டும் 5, 6 ஏ.சி.க்களை வைத்துக்கொண்டு கடும் வெயிலில் மக்களை கஷ்டப்படுத்துகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்.கே.நகர் தொகுதி கேட்டாரா?
பிரசாரம் தொடங்குவதற்கு முன்பு கருணாநிதியை குஷ்பு சந்தித்து வாழ்த்து பெற்றதாக கூறப்பட்டாலும், ஆர்.கே.நகர் தொகுதியில் தான் போட்டியிடுவதற்காக அந்த தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு வழங்கிவிட்டு வேறு தொகுதியை எடுத்துக்கொள்ளுமாறு கருணாநிதியிடம் குஷ்பு கோரிக்கை விடுப்பதற்கு சந்திப்பு அமைந்ததாக அரசியல் வட்டாரத்தில் நேற்று பரபரப்பாக பேசப்பட்டது.
2010–ம் ஆண்டு மே மாதம் 10–ந் தேதி நடிகை குஷ்பு தி.மு.க.வில் சேர்ந்தார். 2014–ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு பின்னர் அன்றைய வருடம் ஜூன் 16–ந்தேதி தி.மு.க.வில் இருந்து விலகி, நவம்பர் 21–ந் தேதி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அதன்படி கருணாநிதியை, 1 ஆண்டு 10 மாதங்கள் கழித்து குஷ்பு சந்தித்து பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் வேட்பாளர்கள் வாழ்த்து
கருணாநிதியுடன் காங்கிரஸ் கட்சியின் நாங்குநேரி தொகுதி வேட்பாளர் எச்.வசந்தகுமார் தனியாக சந்தித்து வாழ்த்து பெற்றார். அம்பத்தூர் தொகுதி வேட்பாளர் ஹசன் மவுலானா, ராயபுரம் தொகுதி வேட்பாளர் மனோ, திருத்தணி தொகுதி வேட்பாளர் ஏ.ஜி.சிதம்பரம், முதுகளத்தூர் தொகுதி வேட்பாளர் மலேசியா பாண்டியன் ஆகியோரும் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்த சந்திப்பின் போது தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஜோதி, ஊடக பிரிவு துறை தலைவர் கோபண்ணா ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.