ஆர்.கே.நகர், மயிலாப்பூர் உள்பட எந்த தொகுதியிலும் சோனியா, ராகுல்காந்தி உத்தரவிட்டால் நான் போட்டியிடுவேன் என்று நடிகை குஷ்பு கூறினார்.
நடிகை குஷ்பு
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு தனது இல்லம் அமைந்துள்ள மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்தநிலையில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) தொகுதியில் குஷ்புவை களம் இறங்க தி.மு.க. கூட்டணியில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
தான் இந்த தேர்தலில் போட்டியிட விருப்பமனு கொடுக்கவில்லை என்றும், எனவே தேர்தலில் திட்டவட்டமாக போட்டியிட மாட்டேன் என்றும் கூறி வந்த நடிகை குஷ்பு, தற்போது சோனியா, ராகுல்காந்தி உத்தரவிட்டால் போட்டியிடுவேன் என்று திடீர் மனமாற்றம் அடைந்துள்ளார்.
பேட்டி
இதுகுறித்து நடிகை குஷ்பு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போது ஏதோ ஒரு தொகுதியில் நான் நிற்க போவதாக என்னை அறியாமல் வதந்திகள் வர ஆரம்பிக்கும். இந்த முறை நான் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட போவதாக சொன்னார்கள். தற்போது ஆர்.கே.நகர் தொகுதி என்று சொல்லிட்டு இருக்காங்க. நான் எந்த தொகுதியிலும் போட்டியிட விருப்ப மனு அளிக்கவில்லை.
சோனியாகாந்தி, ராகுல் காந்தி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரின் முடிவு தான் என்னுடைய முடிவு. அவர்கள் போட்டியிட வேண்டும் என்று சொன்னால் ஆர்.கே.நகர், மயிலாப்பூர், ஏதோ ஒரு கிராமத்தில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் கூட போட்டியிட நான் தயாராகவே இருக்கிறேன்.
பிரசாரம்
போட்டியிட வேண்டாம், பிரசாரம் மட்டும் செய்யுங்கள் என்று சொன்னாலும் தயாராகவே இருக்கிறேன். காங்கிரஸ் கட்சி வெற்றிக்கு கடுமையாக உழைக்க வேண்டும் என்பதே என்னுடைய குறிக்கோள். அதற்கு எந்த பொறுப்பு கொடுத்தாலும் ஏற்க தயாராக உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.