Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 28, 2016

பாரீஸ் தாக்குதல் குற்றவாளி அப்தேஸ்லமை பிரான்சிடம் ஒப்படைத்தது பெல்ஜியம்


கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரான்சு தலைநகர் பாரீஸில் வெவ்வேறு இடங்களில் அடுத்தடுத்து ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 130  அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில்,  இந்த தாக்குதலுக்கு முக்கிய சதிகாரனாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பெல்ஜியத்தை சேர்ந்த சலா அப்தேஸ்லம் என்ற நபர் கடந்த மார்ச் 18 ஆம் தேதி  பெல்ஜியம் போலீசரால் கைது செய்யப்பட்டான்.

பிரான்சு குடிமகனான அப்தேஸ்லம் அந்நாட்டில் உள்ள மோராக்கன் வம்சாவளியை சேர்ந்தவன் ஆவான். பெல்ஜியத்தில் வசித்து வந்த இவன், பாரீஸ் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் உயிருடன் இருக்கும் ஒரே தீவிரவாதி ஆவான். இந்த நிலையில் விசாரணைக்காக பெல்ஜியம் அதிகாரிகள் பிரான்சிடம் அப்தேஸ்லமை ஒப்படைத்தனர்.

ஹெலிகாப்டர் மூலமாக பிரான்சு அழைத்து வரப்பட்ட அப்தேஸ்லாமை, பிரான்சு அதிகாரிகள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு, அப்தேஸ்லம் மீது தீவிரவாத குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை மே 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.