Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 5, 2016

குஜராத்தில் செல்போனை பயன்படுத்தி கூட்டாக காப்பியடித்த 51 மாணவர்கள் மீது வழக்கு பதிவு


 
குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் நடைபெற்ற தேர்வில், செல்போன் வைத்து கூட்டாக காப்பி அடித்ததாக 51 மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கே.கே. பரேக் வணிகவியல் கல்லூரி தேர்வு மையத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில், மாணவர்கள் செல்போன் வைத்து காப்பியடித்த வீடியோ சமூக தளங்களில் வைரலாகப் பரவியது. இதையடுத்தே இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனை அடுத்து சௌராஷ்டிரா பல்கலை சார்பில் 51 கல்லூரி மாணவர்கள் மீது இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வீடியோவில், வெளியில் இருந்து ஒருவர் செல்போன் மூலமாக வினாக்களுக்கான விடைகளைச் சொல்ல சொல்ல, தேர்வு மையத்தில் இருந்த மாணவர்கள் விடையை எழுதிக் கொண்டிருந்தனர். செல்போன் உதவியோடு தேர்வு எழுதிய 51 மாணவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.