April 23, 2016
கத்தை...கத்தையாக..... ரூ. 500 கோடி? சி.சி.டி.வி கேமிராவில் பதிவான காட்சி
கரூர் அன்புநாதன் வீட்டில் ரூ. 500 கோடி பதுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரூ. 500 கோடியை பிரித்து பல தொகுதிகளுக்கு அனுப்பியதாக புகார் எழுந்துள்ளது. பணம் எந்தெந்த தொகுதிக்கு சென்றது பற்றி விசாரிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பணம் பதுக்கிய இடத்தில் சி.சி.டி.வி கேமிரா பொருத்தி கண்காணிக்கப்பட்டது. பணம் பிரித்து அனுப்பப்படும் காட்சிகள் அனைத்தும் கேமிராவில் பதிவாகி உள்ளதாக தெரிகிறது. சி.சி.டி.வி கேமிரா காட்சிகளை அழிக்குமாறு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள் உத்தரவால் கரூரில் உள்ள அதிகாரிகள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.
கேமிரா காட்சி என்ன?
அமைச்சர்கள் இருவர் அன்புநாதன் வீட்டுக்கு வந்து சென்றது கேமிராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பணம் கொண்டு செல்லப்பட வேண்டிய இடத்தை பற்றியும் அமைச்சர்கள் உத்தரவிட்டுள்ளனர். மூத்த அமைச்சர்கள் இருவரும் அன்புநாதனுடன் உரையாடும் காட்சிகள் கேமிராவில் உள்ளன. கேமிரா காட்சிகள் வெளியானால் ஆளுங்கட்சிக்கு நெருக்கடி உருவாகலாம்.
நகைகளும் பறிமுதல்
கரூரில் அன்புநாதன் வீட்டில் ரூ.4கோடியே 80 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்துடன் ரூ. 2 கோடி மதிப்புள்ள பட்டு வேட்டி, புடவை, சட்டை பதுக்கப்பட்டுள்ளது. 2கோடி மதிப்புள்ள தங்க நகைகளும் அன்புநாதன் வீட்டில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கத்தை...கத்தையாக..... ரூ. 500 கோடி? சி.சி.டி.வி கேமிராவில் பதிவான காட்சி
Reviewed by மறத்தமிழன்
on
April 23, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
April 23, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.