Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 17, 2016

வறுமையின் கொடுமை: ஒரே குடும்பத்தில் 4 பேர் விஷம் குடித்தனர்




வறுமையின் கொடுமை: ஒரே குடும்பத்தில் 4 பேர் விஷம் குடித்தனர்
திருவிடைமருதூர்:
கும்பகோணம் அருகே உள்ள சோழன் மாளிகை அண்ணா நகரை சேர்ந்தவர் குமார் (45). கார் டிரைவராக வேலை பார்த்தார். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு அஸ்வினி என்ற மகளும் தீபக் என்ற மகனும் உள்ளனர். அஸ்வினி அங்குள்ள பள்ளியில் 6–ம் வகுப்பும், தீபக் 5–ம் வகுப்பும் படித்து வருகின்றனர். குமாருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனை தொடர்ந்து வறுமை வாட்டியது. பல இடங்களில் கடன் வாங்கியும் அதனை திருப்பி செலுத்த முடியவில்லை.
வாழ்க்கையில் வெறுப்படைந்த குமார் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
நேற்று இரவு குளிர் பானத்தில் விஷம் கலந்து தனது 2 குழந்தைகளுக்கும் கொடுத்தார். பின்னர் மனைவிக்கு கொடுத்து விட்டு தானும் குடித்தார்.
சற்று நேரத்தில் 4 பேரும் மயங்கி விழுந்தனர். இதனை பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் 4 பேரையும் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் 4 பேரும் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இது குறித்து பட்டீஸ்வரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. கும்பகோணம் தாலுகா இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி உத்தரவின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.