சர்வதேச சந்தையில் ரூ.1 கோடி மதிப்புள்ள போதை மருந்து கடத்திய 3 பேரை கைது செய்த டெல்லி போலீசார், 1 டன் எடை கொண்ட போதைப் பொருளையும், கடத்தலுக்கு பயன்பட்ட லாரியையும் பறிமுதல் செய்தனர்.டெல்லி மற்றும் பக்கத்து மாநிலங்களில் தடை செய்யப்பட்ட போதை மருந்து புழக்கம் அதிகரித்து வருவதாக புகார் எழுந்தது. ஹோலி பண்டிகையையொட்டி போதை மருந்து விற்பனை சூடு பிடிக்கும் என்றும் கருதப்பட்டது. ஆந்திரா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து போதை மருந்தை கடத்தி நாடு முழுவதும் கடத்தல்காரர்கள் விற்பனை செய்கின்றனர் என்றும், இதன் பின்னணியில் மிகப்பெரிய நெட்வொர்க் உள்ளது என்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இந்த நிலையில், தேங்காய் மூட்டைகள் என்ற போர்வையில், 1,060 கிலோ எடை கொண்ட போதை மருந்து லாரியுடன் கடத்தல்காரர்கள் டெல்லியில் முகாமிட்டு உள்ளனர் என்றும், மொத்த சரக்கும் 30 நிமிடத்தில் விற்று தீர்ந்துவிடும் என்றும் மார்ச் மாத இறுதியில் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதைத் தொடர்ந்து நாராய்ணா தொழிற்பேட்டையில் பகுதியில் பொறி வைத்து கடத்தல்காரர்களை பிடிக்க போலீசார் திட்டம் தீட்டினர். போலீசார் விரித்த வலையில் ரோஹித், சன்னி எனும் 2 கடத்தல்காரர்கள் சிக்கினர். எனினும், தரம்வீர் எனும் முக்கிய கடத்தல்காரன் போலீசுக்கு டிமிக்கி கொடுத்து தப்பி ஓடிவிட்டான்.போலீசில் சிக்கிய இரண்டு பேரிடமும் நடைபெற்ற விசாரணையில், ஆந்திராவில் இருந்து போதை மருந்து கடத்தி வந்ததை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
இதையடுத்து, ரோஹித்தை ஆந்திரா கொண்டு சென்ற டெல்லி போலீசார். அங்கு பல இடங்களில் சோதனை நடத்தி, இது தொடர்பாக நாக வெங்கடகுமார் என்பவரை விஜயவாடாவில் வைத்து, கைது செய்தனர். கடத்தல் கும்பலைச் சேர்ந்த மேலும் பலரை கையும், களவுமாக பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக மூத்த போலீஸ் அதிகாரி கூறினார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.