Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 10, 2016

நோட்டாவுக்கு 35 சதவீத ஓட்டு பதிவானால் கட்சிகளின் வெற்றி செல்லாதது ஆகிவிடுமா? வாட்ஸ்–அப், பேஸ்புக், டுவிட்டரில் பரப்பப்படும் புரளிக்கு தேர்தல் அதிகாரி எச்சரிக்கை


தேர்தலில் நோட்டாவுக்கு 35 சதவீத ஓட்டு பதிவானால் அந்த தொகுதியில் கட்சிகளின் வெற்றி செல்லாதது ஆகிவிடும் என்று புரளி பரப்பப்படுவதற்கு தேர்தல் அதிகாரி எச்சரிக்கை விடுத்தார்.

நோட்டா பற்றி...
தேர்தல் தொடர்பாக பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப் போன்ற பல்வேறு சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நோட்டா சின்னம் குறித்து சமீபத்தில் சில தகவல்கள் வெளியிடப்பட்டன.

இதுபற்றி ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

35 சதவீதம்
எந்தக்கட்சிக்கும் ஓட்டுப்போட விருப்பம் இல்லாவிட்டால், நோட்டா சின்னத்தில் (யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை) வாக்களித்து விடுங்கள் என்ற தகவல் பரப்பப்படுகிறது.

மேலும், ‘‘நோட்டா என்பது சாதாரண விஷயம் அல்ல. அரசியலை சுத்தம் செய்யும் சின்னம் நோட்டா. எப்படி என்றால், நோட்டாவில் மட்டும் 35 சதவீத ஓட்டுகள் பதிவாகிவிட்டால் போதும். அந்தத் தேர்தலில் எந்தக் கட்சி பெற்ற வெற்றியும் செல்லாததாகிவிடும்.

ஜனாதிபதி ஆட்சி
அந்தத் தேர்தலில் போட்டியிட்ட எந்தக்கட்சியும் மீண்டும் போட்டி போட முடியாது. அதுமட்டுமல்லாமல், அவர்களின் வாரிசுகளும் அரசியலில் ஈடுபட முடியாது.

எனவே 6 மாத காலத்துக்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுவிடும். அதன் பின்பு மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசியல்வாதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த வகையில் அரசியல் தூய்மையாகிவிடும். இந்த அரசியல் சட்டம் தெரியாமல் நாம் இருக்கிறோம். இதை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் – இப்படிக்கு உங்களில் ஒருவன்’’ என்ற ஒரு தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

கடும் நடவடிக்கை
இது புரளி மட்டுமல்லா தவறான தகவலாகும். தேர்தல் தொடர்பாக மக்களின் கவனத்தை திசை திருப்பும் இதுபோன்ற புரளிகளை பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.