வீட்டின் 2–வது மாடி கைப்பிடி சுவரில் அமர்ந்தபடி செல்போனில் பேசிக்கொண்டிருந்த வாலிபர், தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
தனியார் நிறுவன மேலாளர்
திருவொற்றியூர் வினோபா காலனியைச் சேர்ந்தவர் விவேகானந்தன்(வயது 25). இவர், ராயபுரத்தில் உள்ள ஒரு தனியார் ‘டிரான்ஸ்போர்ட்’ நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். கீழ் வீட்டில் வசித்து வந்த விவேகானந்தன், இரவில் படுப்பதற்காக அந்த வீட்டின் 2–வது மாடிக்கு செல்வார்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் அவர், படுப்பதற்காக வீட்டின் 2–வது மாடிக்கு சென்றார். அப்போது அவர், அங்குள்ள கைப்பிடி சுவர் மீது அமர்ந்தபடி செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.
தவறி விழுந்து சாவு
விவேகானந்தன் மாடி கைப்பிடி சுவரில் அமர்ந்து தெருவை பார்த்தவாறு செல்போனில் பேசிக்கொண்டு இருந்த போது திடீரென அவர், நிலைதடுமாறி மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டார். இதில் தலையில் படுகாயம் அடைந்த விவேகானந்தன், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
நேற்று காலை எதிர் வீட்டில் உள்ளவர்கள் கதவை திறந்து வெளியே வந்து பார்த்த போது விவேகானந்தன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர் பயன்படுத்திய செல்போனும் அவருக்கு அருகில் கிடந்தது.
சம்பவ இடத்துக்கு வந்த திருவொற்றியூர் போலீசார், பலியான விவேகானந்தன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.