தமிழக சட்ட மன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. கூட்டணியில் அக்கட்சிக்கு திருச்செந்தூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு சரத்குமார் போட்டியிடுகிறார். அவர் தனது தேர்தல் பிரசாரத்தை இன்று திருச்செந்தூரில் தொடங்கினார்.
முன்னதாக அவர் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் தனது மனைவி ராதிகாவுடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் திருச்செந்தூர் தொகுதி தேர்தல் அலுவலகத்தை கோவில் சன்னதி தெருவில் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஏராளமான அ.தி.மு.க.- ச.ம.க. தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது அவர் நிருபர்களிடம், ‘தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையில் நடந்து வரும் நல்லாட்சி தொடர்வதற்காக அ.தி.மு.க.வுடன் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. திருச்செந்தூர் தொகுதியை வளமிக்கதாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்வேன். தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும்’ என்றார்.
பின்னர் அவர் நான்கு ரதவீதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அங்குள்ள வியாபாரிகள், பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.திருச்செந்தூரில் பிரசாரத்தை தொடங்கினார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.