Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 22, 2016

50 ரூபாய்க்கு 20 ஜீபி டேட்டா ? பி எஸ் என் எல் திட்டத்தால் பரபரப்பு


புதுடெல்லி : பிஎஸ்என்எல் நிறுவனம் 50 ரூபாய்க்கு 20 ஜிபி 3ஜி டேட்டா வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஸ்மார்ட் போன்களில் அதிவேக இணைய சேவையை வழங்கும் வகையில் 3ஜியை அடுத்து 4ஜி சேவையையும் மொபைல் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இந்நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் திடீரென தனது 3ஜி சேவையை 20 ஜிபி 50 ரூபாய்க்கு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின்படி அனைவருக்கும் இணைய சேவை வழங்குவதை இலக்காக கொண்டு இந்த சலுகை விலையில் 3ஜி சேவை வழங்க உள்ளதாகவும், மத்திய அரசு மானியத்துடன் இது செயல்படுத்தப்படுவதாகவும், இதை ஒருவரே பயன்படுத்தலாம் அல்லது நாடு முழுவதும் 4 பேருக்கு இதை பகிர்ந்து அளிக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
ஊரக பகுதிகளில் உள்ளவர்களில் குடும்பத்தில் ஒருவர் இந்த பேக்கேஜ் பெற்று, அதை 4 பேருக்கு பகிரலாம். முன்னதாக இவர்கள் பிஎஸ்என்எல் செல்ப்கேர் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என  பிஎஸ்என்எல் அலகாபாத் பொதுமேலாளர் ராம் சுப்யாதவ் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், பிஎஸ்என்எல் தரப்பில் இதை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை. தற்போது பிரபல நிறுவனங்கள் பல ஒரு ஜிபி 3ஜி டேட்டாவுக்கு ரூ.160 முதல் ரூ.250 வசூலிக்கும் நிலையில், அதைவிட 4ல் ஒரு பங்கு கட்டணத்தில் 20 மடங்கு கூடுதல் டேட்டா வழங்குவது பிஎஸ்என்எல்லுக்கு வாடிக்கையாளர்களை அதிகமாக இழுக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் இது டிராய் விதிகளுக்கு உட்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.