2017-ம் ஆண்டு முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து மொபைல் போன்களிலும் 'பேனிக் பட்டன்' பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆபத்து காலங்களில் இந்த பேனிக் பட்டனை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆபத்து நேரத்தில் ஒருவர் பேனிக் பட்டனை அழுத்தினால் அருகிலிருக்கும் பாதுகாப்பு மையத்துக்கு ஒரு அழைப்போ அல்லது சமிக்ஞையோ அனுப்பப்படும். இருப்பினும், இந்த செயல்பாடு எப்படி நடைமுறைப்படுத்தப்படும் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
அனைத்து மொபைல் போன்களிலும் பேனிக் பட்டன் மற்றும் குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் வசதி ஏற்படுத்தும் திட்டம் 2016-ன் கீழ் (The Panic button and Global Positioning System facility in all mobile phone handsets Rules, 2016) அறிவிக்கை ஒன்றை தொலைத் தொடர்பு துறை கடந்த 22-ம் தேதி வெளியிட்டிருக்கிறது.
இதன்படி 2017 ஜனவரி 1 முதல் இந்தியாவில் உள்ள அனைத்து மொபைல் போனிலும் பேனிக் பட்டன் வசதி இருப்பது அவசியம். அதேபோல், 2018 ஜனவரி 1 முதல் அனைத்து மொபைல் போன்களிலும் உட்கட்டமைக்கப்பட்ட ஜிபிஎஸ் வசதியும் இருப்பது அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பம் மனித வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு உதவ வேண்டும் என்ற அடிப்படையில் இந்த திட்டம் கொண்டு வரப்படுவதாக மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.