Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 15, 2016

ஆவடியில் பிளஸ்–2 மாணவியை கடத்தி கட்டாய திருமணம் செய்தவர் கைது


ஆவடியை சேர்ந்த 17 வயது பிளஸ்–2 மாணவி, கடந்த 1–ந்தேதி பொதுத்தேர்வு எழுத வீட்டில் இருந்து பள்ளிக்கூடம் சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின்பேரில் ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்தநிலையில் மாயமான அந்த மாணவி, நேற்று முன்தினம் மாலை சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து தனது பெற்றோருக்கு போன் செய்து தன்னை வந்து அழைத்து செல்லுமாறு கூறினார். உடனடியாக கோயம்பேடு சென்ற அவர்கள் தங்கள் மகளை வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

விசாரணையில், ஆவடி நந்தவனமேட்டூர் பகுதியை சேர்ந்த காலிப் (வயது 19) என்பவர் திருமண ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்திச் சென்று திருப்பதி கோவிலில் அவரை கட்டாயப்படுத்தி தாலி கட்டியதாகவும், பின்னர் அங்கு வாடகைக்கு அறை எடுத்து தங்கி விட்டு தன்னை கோயம்பேடு கொண்டு வந்து விட்டு விட்டதாகவும் கூறினார்.

இது குறித்து ஆவடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்தியகுமாரி வழக்குப்பதிவு செய்து காலிப்பை கைது செய்தார். பின்னர் அவரை திருவள்ளூர் மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.