மார்த்தாண்டம்: இரண்டு பெண்களை திருமணம் செய்துகொண்ட 2 பேருடன் ஜாலி வாழ்க்கை நடத்திய வாலிபருடன் ஓடிய மாணவி மீட்கப்பட்டார். போலீசார் விசாரித்துக்கொண்டு இருந்தபோது இருவரும் மயங்கிவிழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.மார்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி.
பிளஸ்2 படிக்கிறார். கடந்த 29ம் தேதி தேர்வு
எழுதச்சென்ற மாணவி, வீடு திரும்பவில்லை. பதற்றம் அடைந்த பெற்றோர் பள்ளிக்கு சென்று
விசாரித்தனர். தேர்வு எழுதிவிட்டு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து மாணவியை பல்வேறு இடங்களில் தேடினர். அவரை பற்றி எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை. வீட்டில் வைத்திருந்த மாணவியின் துணிமணிகளையும் காணவில்லை.
இதையடுத்து மாணவியை பல்வேறு இடங்களில் தேடினர். அவரை பற்றி எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை. வீட்டில் வைத்திருந்த மாணவியின் துணிமணிகளையும் காணவில்லை.
இதனால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.இதுபற்றி
மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் விசாரணை
நடத்தியதில் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் மாணவி மாயமாகி இருப்பது
தெரியவந்தது.
அந்த வாலிபர் 2 பெண்களை திருமணம் செய்துகொண்டு 2 பெண்களுடன் ஜாலியாக குடும்பம் நடத்துகிறார் என்று தெரியவந்துள்ளது.
அந்த வாலிபர் 2 பெண்களை திருமணம் செய்துகொண்டு 2 பெண்களுடன் ஜாலியாக குடும்பம் நடத்துகிறார் என்று தெரியவந்துள்ளது.
போலீசார் விசாரணை நடத்தி, வாலிபரும், மாணவரும்
பதுங்கியிருந்த இடத்தை கண்டுபிடித்தனர். போலீசார் அங்கு சென்று அவர்களை பிடித்து
காவல் நிலையத்துக்கு கொண்டுவந்து விசாரித்தனர். அப்போது இருவரும் மயங்கிவிழுந்தால்
போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, ‘’ நாங்கள் தீவிரமாக
காதலித்து வருகிறோம்.
எங்களை பிரித்து விடுவார்கள் என்ற பயத்தில் விஷம்
குடித்தோம்’ என்றனர். உடனடியாக இருவரையும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி
மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.