Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 10, 2016

15 கோடி நிலம், 146 பவுன் நகையை அபகரித்துவிட்டதாக அதிமுக வேட்பாளர் தென்னரசு மீது ஈரோடு தம்பதி பரபரப்பு புகார்



ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தென்னரசு மீது ரூ.15 கோடி மதிப்புள்ள 5.35 ஏக்கர் நிலம், 146 பவுன் நகைகளை மோசடி செய்து அபகரித்துவிட்டதாக ஈரோட்டை சேர்ந்த தம்பதி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர். இந்த குற்றச்சாட்டை கூறியதற்காக அவரின் ஆட்கள் இந்த தம்பதியரை பின் தொடர்ந்து வருவதாகவும் மிரட்டல் விடுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஈரோட்டை சேர்ந்த உமாமகேஸ்வரன், கோமதி தம்பதியினர் சென்னையில் நேற்று நிருபர்களை சந்தித்து கூறியதாவது: நான் ஈரோட்டில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறேன். மேலும் ரியல் எஸ்டேட் தொழிலும் ஈடுபட்டு வந்தேன். கடந்த 1996ம் ஆண்டு ரியல் எஸ்டேட் தொழில் மேற்கொள்வதற்காக அப்போதைய எம்எல்ஏ தென்னரசு மற்றும் அவருடைய கூட்டாளிகளான ரெயின்போ குப்புசாமி, ரங்கசாமி, முத்துசாமி, சரஸ்வதி ஆகியோர் நடத்தி வந்த பைனான்சில் ரூ.2 லட்சம் கடன் வாங்கினேன்.
இரண்டு வருடங்கள் வட்டியை முறையாக கட்டினேன். பின்னர் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக 1998ல் வட்டி கட்ட முடியாது நிலை ஏற்பட்டது. மேலும், ரியல் எஸ்டேட் தொழிலை மேற்கொள்ள எனது நகை 146 பவுன் வங்கியில் வைத்திருந்தேன்.

வட்டி கட்ட முடியாததால் நகைகள் ஏலத்திற்கு வந்தது. இதையறிந்த தென்னரசு என்னை அழைத்து ஏலத்திற்கு வரும் நகையை நான் மீட்டு வைத்திருக்கிறேன். பணம் கிடைத்தவுடன் நகையை என்னிடம் இருந்து மீட்டு கொள்ளும் படி கூறினார். அதை நம்பி நாங்களும் அவரிடைம் இருந்து பணத்தை வாங்கி நகையை மீட்டு தென்னரசிடமே அளித்தோம். பின்னர் நகைக்கு அளித்த பணம், மற்றும் ஏற்கனவே கடன் வாங்கிய ரூ. 2 லட்சம் பணத்திற்காக அவினாசி அருகே உள்ள ரூ.15 கோடி மதிப்புள்ள 5.35 ஏக்கர் நிலத்தின் அசல்  பத்திரத்தை ஜாமீனாக தென்னரசு வாங்கி கொண்டார்.
பின்னர், பணம் வந்த பிறகு நகை மற்றும் நிலத்தை தரும் படி கேட்டோம். ஆனால், அவர் தராமல் அடி ஆட்களை வைத்து மிரட்டினார். 2011ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 10ம் தேதி முதல்வர் தனி பிரிவில் தென்னரசு மீது புகார் அளித்தோம். ஆனால், புகாரின் பேரில் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தென்னரசு வேட்பளாராக அதிமுக அறிவிக்கப்பட்டுள்ளதை கண்டு நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். எங்களை போன்று பலரையும் தென்னரசு ஏமாற்றி உள்ளார்.

எனவே, அவரை தேர்தலில் நிற்க அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்தி போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் மனு அளித்தோம். அப்போது தென்னரசு போயஸ் கார்டனில் தான் இருந்தார். நாங்கள் புகார் அளிப்பதை பார்த்த தென்னரசு ஆட்டோ டிரைவர்கள் மூலம் நாங்கள் எங்கு தங்கி இருக்கிறோம், அடுத்து எங்கு செல்கிறோம் என்று கேட்டு 3 பேர் எங்களை மிரட்டினர். இதனால் அதிர்ச்சியடைந்த நாங்கள் பாதுகாப்பாக போயஸ் கார்டனில் இருந்து வெளியேறினோம். நாங்கள் தென்னரசுக்கு எதிராக புகார் அளித்துள்ளதால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை. நாங்கள் செல்லும் இடங்களில் தென்னரசு அடியாட்களை வைத்து பின் தொடர்கிறார். எனவே அவரிடம் இருந்து எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும், எங்களிடம் நிலம் மற்றும் பணத்தை அபகரித்த தென்னரசுக்கு மீண்டும் அதிமுக தலைமை வாய்ப்பு தரக்கூடாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.