Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 27, 2016

தைவானில் 15 பேர் உயிர்ப்பலிக்கு காரணமான உல்லாச தண்ணீர் பூங்கா அதிபருக்கு 4 ஆண்டு சிறை


தைபே,

தைவான் நாட்டின் தலைநகரமான தைபேயில், புது தைபே பகுதியில் உள்ள ‘பார்மோசா வாட்டர் பார்க்’ என்ற உல்லாச தண்ணீர் பூங்காவில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 27–ந் தேதி இரவு சிறப்பு விருந்து ஒன்று நடைபெற்றது. அதில் ஏராளமான வாலிபர்களும், இளம்பெண்களும் கலந்து கொண்டு ஆடல், பாடல் என குதூகலமாய் இருந்தனர்.

அப்போது கோடை வெப்பத்தை தணித்துக்கொள்வதற்காக அவர்கள் ஒருவருக்கு ஒருவர் வண்ணப்பொடிகளை தூவினர். அப்போது வீசப்பட்ட வண்ணப்பொடி எதிர்பாராத விதமாக வெடித்து தீப்பிடித்தது.

500–க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த இந்த சம்பவத்தில், 15 பேர் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக உல்லாச தண்ணீர் பூங்காவின் அதிபர் லு சங் சி, மீது வழக்கு தொடரப்பட்டது. தேவையான பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காமல், அசட்டையாக இருந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை முடிவில், அவர் குற்றவாளி என கோர்ட்டு கண்டு 4 ஆண்டு, 10 மாதம் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு அளித்தது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.