Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 6, 2016

ரியல் எஸ்டேட் அதிபரின் வீட்டில் 125 சவரன் நகை, பணம் கொள்ளை


சென்னை அடுத்த ஈஞ்சம்பாக்கம் அனுமான் காலனி பிரதான சாலையை சேர்ந்தவர் ஸ்டீபன் (38), ரியல் எஸ்டேட் செய்து வருகிறார். இவரது குடும்பத்தினர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் உள்ள உறவினரின் வீட்டிற்கு சென்றனர். வீட்டில் ஸ்டீபன் மட்டும் தனியாக இருந்துள்ளார். இதை மர்ம நபர்கள் நோட்டமிட்டுள்ளனர். நேற்று முன்தினம் வழக்கம்போல் ஸ்டீபன் வீட்டை பூட்டிவிட்டு தொழில் நிமித்தமாக வெளியே சென்றுவிட்டு மாலை வீடு திரும்பினார். அப்ேபாது, வீட்டின் பூட்டு உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பட்டப்பகலில் உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 125 சவரன் நகை, 50 ஆயிரம் ரொக்கப்பணத்தை கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, நீலாங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதையடுத்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, அது சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகியிருந்த ரேகைகளை பதிவு செய்தனர். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.