Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 9, 2016

பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி வாட்ச்மேனுக்கு 11 ஆண்டு சிறை தண்டனை


  காரைக்கால்மேடு அரசு உயர்நிலைப்பள்ளியில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாட்ச்மேனுக்கு 11 ஆண்டு சிறை தண்டனை வழங்கி காரைக்கால் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. காரைக்கால் மாவட்டம் காரைக்கால்மேடு மீனவ கிராமத்தில் பக்கிரிசாமி பிள்ளை அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 2013ம் ஆண்டு வாட்ச்மேனாக பணியாற்றியவர் காளியப்பன் (39). இவர் அப்பள்ளியில் பயிலும் சிறுமிகளுக்கு மாலை நேரத்தில் தின்பண்டம் வாங்கி கொடுத்து  பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுப்பதாக அப்போதைய பள்ளி தலைமை ஆசிரியர் மாரிமுத்து (பொ), மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சுப்பிரமணியன் ஆகியோரிடம் கிராம மக்கள் புகார் செய்தனர். 

இந்நிலையில் 2013 மார்ச் 25ம் தேதி மாலையில் 4ம் வகுப்பு படிக்கும் 2 சிறுமிகளை பள்ளியின் மொட்டை மாடிக்கு வாட்ச்மேன் காளியப்பன் அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மறுநாள் பள்ளிக்கு வந்த வாட்மேன் காளியப்பனை கிராமமக்கள் பிடித்து அங்குள்ள மரத்தில் கட்டி வைத்து அடித்தனர். பிறகு பள்ளி ஆசிரியர்கள், காரைக்கால் நகர காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். காரைக்கால் நகர போலீசார், காளியப்பன் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். காரைக்கால் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தது.  இதில் காளியப்பன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 11 ஆண்டு சிறை, ரூ.12,500 அபராதம் விதித்து நீதிபதி மார்கிரேட் ரோசலின் நேற்று தீர்ப்பு வழங்கினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.