கூந்தல் வறண்டிருந்தால் உடைந்து உதிரும். கூந்தல் வறட்சிக்குப் பல காரணங்கள் உள்ளன. வறட்சியில்லாத மென்மையான கூந்தல்தான் பார்வைக்கும் அழகு. பராமரிக்கவும் எளிது. கூந்தல் வறட்சிக்கு கெமிக்கல் கலந்த சிகிச்சைகளை முயற்சி செய்வதைத் தவிர்த்து, வீட்டிலேயே எளிமையான வழிகளைப் பின்பற்றலாம். அப்படிச் சில வழிகள் இதோ...
1. செம்பருத்திப்பூ, இலை, பூங்கங்காய், வேப்பிலை, வெந்தயம், கற்றாழை ஆகியவற்றை கைப்பிடி அளவு எடுத்து, இடித்து தண்ணீரில் கொதிக்க வைக்கவும். ஆறிய பிறகு வடிகட்டி தலைக்கு ஷாம்புவுக்கு பதில் உபயோகிக்கலாம். இந்த இயற்கை ஷாம்பு, கூந்தலின் வறட்சியை நீக்கி, முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும்.
2. கற்றாழையின் உள்ளே இருக்கும் ஜெல் போன்ற பகுதியையும்(நன்கு அலசி சுத்தப்படுத்தியது), செம்பருத்திப் பூக்களையும் சம அளவு எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் சேர்த்து அரைத்து சிறிது நல்லெண்ணெய் கலந்து தலையில் பேக் மாதிரி தடவி, 20 நிமிடங்கள் ஊறியதும், கூந்தலை அலசவும்.
3. வாழைப்பழத்தை அரைத்து தலையில் தடவி, வெந்நீரில் நனைத்துப் பிழிந்த டவலால் ஒத்தடம் கொடுக்கவும். 20 நிமிடம் கழித்து கூந்தலை அலசவும். இது கூந்தல் வறட்சிக்கு மிகச் சிறந்த இயற்கை ஸ்பா. எலுமிச்சைப் பழச்சாறு அல்லது கருப்பு வினிகர் கலந்த தண்ணீரில் தலையை அலசவும்.
4. முட்டையின் வெள்ளைக்கரு, பால் ஏடு இரண்டையும் ஒன்றாக கலந்து நன்கு அடித்துக் கொள்ளவும். கூந்தலை சின்னச் சின்ன பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு, தடவவும். 15 நிமிடங்களுக்கு பிறகு கூந்தலை அலசவும்.
5. ஆலிவ் எண்ணெயை சூடாக்கி, கூந்தலில் மசாஜ் செய்து வெந்நீரில் நனைத்துப் பிழிந்த டவலால் ஒத்தடம் கொடுத்து அலசினால் கூந்தல் வறட்சி நீங்கி, மென்மையாகும்.
6. பப்பாளியை நன்றாக கூழாக்கி, பேக் மாதிரி தலையில் தடவி சிறிது நேரம் ஊறவைக்கவும். பிறகு நிறைய தண்ணீர் விட்டு அலசினால், கூந்தல் பளப்பாகவும் மிருதுவாகவும் இருக்கும்.
7. முதல் நாள் இரவே வெந்தயத்தை ஊற வைக்கவும். மறுநாள் அதை அரைத்து தயிருடன் கலந்து தலையில் தடவி, சிறிது நேரம் ஊறவைக்கவும். பிறகு இயற்கை ஷாம்பு உபயோகித்து, வெதுவெதுப்பான தண்ணீரில் அலசவும்.
8. செம்பருத்தி, வேப்பிலை, புதினா ஆகியவற்றை சம அளவு எடுத்து தண்ணீரில் கொதிக்க வைக்கவும். ஆறிய பிறகு இதைக் கசக்கினால் கொழ கொழவென்று வரும். அதை நன்றாக கலந்து தலையில் மண்டைப் பகுதியிலிருந்து நுனி வரை நன்கு தடவவும். 20 நிமிடங்களுக்குப் பிறகு அலசவும். இதனால் தலைமுடி மிருதுவாவதுடன் அரிப்பு, பொடுகு, முடி உதிர்வும் நிற்கும்.
9. ஆமணக்கு எண்ணெயில், கற்றாழையின் நடுவில் இருக்கும் ஜெல்லை எடுத்து ஊற வைக்கவும். அதை தலையில் தடவி, ஊற வைத்து குளிப்பது முடி உதிர்வு மற்றும் வறட்சிக்கு மிகச் சிறந்த மருந்தாக வேலை செய்யும்.
10. மிளகு, வெற்றிலை, கறிவேப்பிலை இந்த மூன்றையும் அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தடவி வெது வெதுப்பான தண்ணீரல் அலசவும். பேன், பொடுகு நீங்குவதுடன் தலைமுடி பட்டு போல மாறும்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.