அறிவிக்கப்பட்ட தி.மு.க., வேட்பாளர்களில், முன்னாள் அமைச்சர்கள், 10 பேர், சொத்து குவிப்பு வழக்கில் சிக்கி உள்ளனர். இவர்களில், பொன்முடி மீதான வழக்கில், ஏப்., 18ல், தீர்ப்பு வர உள்ளது.முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பற்றி, தி.மு.க., தலைவர் கருணாநிதியும், பொருளாளர் ஸ்டாலினும், மேடை தோறும் முழங்கி வருகின்றனர். ஊழல் வழக்குகளை விசாரிக்க, மற்ற மாநிலங்களில் அமைக்கப்பட்டிருப்பது போல, தமிழகத்திலும், 'லோக் ஆயுக்தா' அமைப்பு ஏற்படுத்தப்படும் என்றும் கூறி வருகின்றனர். தி.மு.க., தேர்தல் அறிக்கையிலும், 'லோக் ஆயுக்தா' பற்றி உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
வழக்கு இல்லை
கட்சி தலைவர் கருணாநிதி, பொதுச் செயலர் அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின் மீது, சொத்து குவிப்பு வழக்கு எதுவும் இல்லை. ஆனால், தி.மு.க., ஆட்சியில் அமைச்சர்களாக பதவி வகித்தவர்களில், 16 பேர் மீது, சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது.
முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பெரிய கருப்பன், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தமிழரசி, என்.கே.கே.பி.ராஜா, ஐ.பெரியசாமி, பரிதி இளம்வழுதி, கே.பி.பி.சாமி, நேரு, பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பொங்களூர் பழனிசாமி, சுரேஷ் ராஜன், அன்பரசன், வேலு ஆகியோர் மீது, சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இவர்களில், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேலு, பரிதி இளம்வழுதி ஆகியோர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். தற்போது, அ.தி.மு.க.,வில், பரிதி இளம்வழுதி உள்ளார். எழும்பூர் தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளராக போட்டியிடுகிறார்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள, தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியலில், தா.மோ.அன்பரசன் - ஆலந்துார்; சுரேஷ் ராஜன் - நாகர்கோவில்; பொன்முடி - திருக்கோவிலுார்; நேரு - திருச்சி மேற்கு; கே.பி.பி.சாமி - திருவொற்றியூர்; ஐ.பெரியசாமி - ஆத்துார், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் - அருப்புக்கோட்டை; தங்கம் தென்னரசு - திருச்சுழி; பெரிய கருப்பன் - திருப்பத்துார்; துரைமுருகன் - காட்பாடி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
வழக்கில் இருந்து, விசாரணை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேலு ஆகியோரும், வேட்பாளர்கள் பட்டிய லில் உள்ளனர். பொங்களூர் பழனிசாமி, என்.கே.கே.பி.ராஜா, தமிழரசி ஆகியோருக்கு இந்த முறை, 'சீட்' இல்லை.
தொங்கும் கத்தி
சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்ட போது, முதல்வராக இருந்த ஜெயலலிதா, பதவி இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தி.மு.க., 'மாஜி'க்கள் மீதான வழக்குகளும், தலையில் தொங்கும் கத்தி போன்றதே.
ஊழல் வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டாலே, உடனடியாக பதவியை விட்டு இறங்க வேண்டியது தான். முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கில், ஏப்., 18ல், தீர்ப்பு வர உள்ளது. மற்றவர்கள் மீதான வழக்கில், இப்போதைக்கு தீர்ப்பு வர வாய்ப்பில்லை.
'அரசியல் ரீதியாக சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது' என, தி.மு.க.,வினர் கூறினாலும், நில அபகரிப்பு வழக்கு, குண்டர் சட்டத்தின் கீழ் கைதானவர்கள் என குற்ற வழக்குகள் நிலுவை யில் உள்ள சிலரும், வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக, தி.மு.க.,வினரே வருத்தப்படுகின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.