Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 14, 2016

தனியார் நிதி நிறுவனம் 1000 கோடி மோசடி


தமிழகத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.1000 கோடி வரை மோசடி செய்யப்பட்டுள்ளது.  பரிவார் டெய்ரீஸ் என்ற பெயரில் கடந்த 2002ல் மத்திய பிரதேசத்தில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் அங்குள்ள மக்களிடம் முதலீடு பெற்று, அதற்கு வட்டி தருவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்தது. இதைத் தொடர்ந்து அந்த நிறுவனம் அங்கு தடை செய்யப்பட்டது. இந்த நிறுவனம் தமிழகத்தில் சென்னை அண்ணா சாலை, தஞ்சாவூர், மதுரை ஆகிய இடங்களில் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் மீது சென்னையில் மட்டும் 15 ஆயிரம் பேர் புகார் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் இந்த நிறுவனம் பல இடங்களில் மூடப்பட்டுள்ளது.

இன்னும் பல மாவட்டங்களில் தொடர்ந்து விதிகளை மீறி இயங்கி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட பரிவார் டெய்ரீஸ் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ரூ.1000 கோடி வரை வசூல் செய்து மோசடி செய்த இதன் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நிறுவனத்தின் சொத்துக்களை முடக்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும். பரிவார் டெய்ரீஸ் நிறுவனம் நடத்திய விழா ஒன்றில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டுள்ளார். எனவே, மோசடி நிறுவனத்திற்கும் இவருக்கும் தொடர்பு உள்ளதா எனவும் விசாரிக்க வேண்டும் என்று பரிவார் டெய்ரீஸ் நிறுவனத்தின் களப்பணியாளர்கள் மற்றும் வைப்பாளர் நலச் சங்க தலைவர் ராஜேந்திர ராஜூ, செயலாளர் ராமமூர்த்தி, வக்கீல் சிவகுமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.