'எப்படி இருந்த நான்... இப்படி ஆகிட்டேன்' - விவேக்கோட தெறி டயலாக் எல்லாருக்குமே ஞாபகம் இருக்கும். அவர் சொன்னத ஒருத்தர் செஞ்சே காட்டி இருக்காரு. ஆமாம், அம்பானி பையன் ஆனந்த் அம்பானி, 108 கிலோவிலிருந்து 60 கிலோவிற்கு 18 மாதங்களில் வந்திருக்கிறார். தன்னுடைய சொந்த முயற்சியாலும் கடின உழைப்பாலும் இதை சாதித்திருக்கிறார் இந்த மில்லியன் டாலர் பேபி!
எப்படி சாத்தியமானது இந்த எடைகுறைப்பு என்பதை சொல்லும் ஃபிட்னெஸ் ரகசியங்கள் இதோ...
1 - லோ கார்ப் டயட்!
ஆனந்த் பின்பற்றியது ''குறைவான கார்போஹைட்ரேட் உணவுகள், ஜீரோ சர்க்கரை, கெமிக்கல்கள் கலக்கப்பட்ட ப்ராசஸ்ட் உணவுகளை தவிர்ப்பது'' என ஒரு லோகார்ப் டயட். ரொட்டி, அரிசி உணவுகள், இனிப்புகள், கார்பனேடட் குளிர்பானங்கள் என எதையும் நினைப்பதற்கு கூட தடைதான். முழுக்க முழுக்க புரதச்சத்து மிகுந்த உணவுகளும் ஆரோக்கியமான கொழுப்பு கொண்ட பொருட்களும்தான் உண்ண வேண்டும்.
2 - 21 கிமீ நடைப்பயிற்சி!
ஒவ்வொரு நாளும் 21 கி.மீ வரைக்கும் நடையாய் நடந்துதான் அம்பானி பையன் தன்னுடைய எடையை முழுமையாக குறைத்திருக்கிறார். இது அத்தனை எளிதல்ல. 21 கி.மீ என்பது அரை மாரத்தான் நீளம். ஆமை வேகத்தில் நடந்தால் கூட மூன்றரை மணி நேரமாகும். ஒவ்வொருநாளும் இதை செய்வதற்கு, உறுதியான உடலை விட செய்யமுடியும் என்கிற நம்பிக்கைதான் ரொம்பவே அவசியம். அது ஆனந்திடம் இருந்திருக்கிறது.
3 - யோகா!
எந்த ஒரு செயலையும் மிகச்சரியாக செய்ய உங்கள் மூச்சு ரொம்பவே முக்கியம். அதை மிகச்சரியாக பயன்படுத்த யோகா ஒரு நல்ல கருவி. கூடவே யோகா செய்யும்போது, உடல் எடை குறைவதால் உண்டாகும் உடல் மற்றும் மன மாற்றங்களை சீராக்கி தேவையில்லாத பின்விளைவுகள் உண்டாவதை குறைக்கும். கூடவே எடை குறைப்புக்கான அடுத்தடுத்த விஷயங்களை
4 - எடைப்பயிற்சி!
வெறும் நடையும் யோகாவும் மட்டுமே உடல் எடையை குறைத்துவிடாது. ஜிம்களில் இந்த வெயிட் ட்ரெயினிங்தான் இப்போது ட்ரெண்ட். இது உங்களுடைய தசைகளை வலுவாக்கும். கூடவே கொழுப்பை வேகமாக கரைக்கவும் உதவும்.
5 - ஃபங்கஷனல் ட்ரெயினிங்!
உங்களுடைய ஒட்டுமொத்த உடலையும் பயன்படுத்தி செய்யக்கூடிய தொடர்ச்சியான எளிய உடல்பயிற்சிகள். உதாரணத்திற்கு உட்கார்ந்து எழுந்திருக்கிற ஸ்குவாட் வகைகள், முன்னோக்கி நகர்ந்து அமரும் லஞ்சுகள், ஸ்டெரச்சிங் பயிற்சிகள் என பலதும் இதில் உண்டு. இதை முறையான பயிற்சியாளர் மூலம் கற்றுக்கொண்டு செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
இதேபோல் உங்களது சுவாரஸ்யமான எடைக்குறைப்பு சீக்ரெட்டை கமெண்டில் பதிவு செய்யுங்கள்!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.