மீன் பிடிக்கலாம்... படகு சவாரி செய்யலாம்... சென்னையில் ஒரு இகோ டூரிஸ்ட் ஸ்பாட்!சுற்றுச்சூழலியலை மையப்படுத்தி சென்னையின் மத்தியில் உருவாகியிருக்கிறது புதியதொரு சுற்றுலா தலம். கிண்டி சிறுவர் பூங்கா, பாம்பு பண்ணை, வண்டலூர் மிருகக்காட்சி சாலை இவற்றின் வரிசையில் சென்னையின் மற்றொரு இகோ டூரிஸ்ட் ஸ்பாட்டாக முளைத்திருக்கிறது சேத்துப்பட்டு ஏரி.
இயற்கை சார்ந்த சுற்றுலா எனப்படும் இகோ டூரிஸத்தை மேம்படுத்த அமைக்கப்பட்டிருக்கும் இந்த பசுமை பூங்கா, இப்போதைக்கு சென்னையில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று. சென்னையின் மையப்பகுதியில், மீன்வளத்துறைக்கு சொந்தமான 16 ஏக்கர் பரப்பளவு கொண்ட சேத்துப்பட்டு ஏரிதான் 42 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு, பல்வேறு வசதிகளுடன் தற்போது பசுமை பூங்காவாக மாற்றம் பெற்றிருக்கிறது. மீன் பிடி வசதி, படகு சவாரி, நடை பயிற்சி மேடை, உயிரியல் பற்றிய தகவல் பலகைகள், சிறுவர்களுக்கான விளையாட்டு திடல் என சுற்றுலாவாசிகளை ஆச்சர்யப்படுத்துகிறது இந்த பசுமைப்பூங்கா
அமைவிடம்
சென்னை நகரின் நடுவே கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, ஈகா திரையரங்கம், சேத்துப்பட்டு ரயில் நிலையம் என முக்கியமான இடங்களுக்கு மிக அருகில் அமைந்துள்ள இந்த பசுமை பூங்கா, சுற்றுலா பயணிகள் சிரமமில்லாமல் வந்து செல்லும் வகையில் இருப்பதும் சிறப்பு.
படகு சவாரி
என்னதான் காற்று வாங்க மெரீனா பீச் சென்றாலும், படகு சவாரி பிரியர்களுக்கு மத்திய சென்னையில் படகு சவாரி செய்ய எந்த இடமும் இல்லாமல் இருந்தது. அவர்களின் ஆசையை முட்டுக்காடுதான் நிறைவேற்றி வந்தது. இப்போது நகரின் மையத்திலேயே படகு சவாரியும் வந்து விட்டது. இயற்கை அழகை ரசித்தவாறே படகு சவாரி செய்யலாம். சென்னை நகருக்குள் படகு சவாரி செய்ய வாய்ப்பு இல்லையே என்று ஏங்கிக்கிடந்தவர்களின் ஆசை, இதனால் நிறைவேறியுள்ளது. சேத்துப்பட்டு ஏரியை சுற்றிலும் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளதால் காலை நடைபயிற்சி மேற்கொள்ளலாம். இதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். இந்த பசுமைப் பூங்காவில் சுற்றுலாவாசிகள் தங்கள் உடல்நலத்தை மேம்படுத்தவும், பொழுதுபோக்கவும், இயற்கை அழகை பாதுகாக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
அதோடு, உலகில் உள்ள மீன் வகைகள் மற்றும் இதர கடல் வாழ் உயிரினங்கள் குறித்த தகவல் பலகைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சிறுவர்கள் விளையாட சிறுவர் பூங்கா ஒன்றும் பசுமை பூங்காவினுள்ளே அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஏரியில் மீன் பிடித்து மகிழ விரும்புவோருக்கு தனியே இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கட்டணம்
நுழைவுக்கட்டணம் 25 ரூபாயும், படகு சவாரிக்கு 50 ரூபாயும், மீன் பிடிப்பதற்கு மீன்களின் எண்ணிக்கையை பொறுத்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் மீன் பிடித்து மகிழ வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும், மீன் பிடித்த பிறகு ஏரியினுள்ளே விட்டுவிட வேண்டும் என்பது நிபந்தனை. நடைபயிற்சி மேற்கொள்ள மாதம் மற்றும் வருட சந்தா என சலுகைக் கட்டணங்கள் விதிக்கப்பட்டுள்ளன.
இகோ டூரிஸம்
பசுமை பூங்காவின் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்க, ஏரியின் கரையோரங்களில் நடைபாதை அமைக்கப்பட்டு, அதை சுற்றி அழகிய செடிகளும் மரங்களும் நடப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. மேலும், ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும் வகையில் இந்த ஏரி புனரமைக்கப்பட்டுள்ளது. ஏரியில் இந்திய வகை மீன்கள் விடப்பட்டுள்ளன. மீன்கள் சுவாசிக்க பிரத்யேகமாக ஆக்சிஜன் வாயு குழாய் ஏரியினுள் பதிக்கப்பட்டுள்ளது. ஏரியில் உள்ள தண்ணீர் தொடர்ந்து சுத்திகரிக்கப்படுகிறது. பல்லுயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் ஏரிக்கு வரும் பறவைகளின் எண்ணிக்கையும் எதிர்காலத்தில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுலா பயணிகள்
பரப்பரப்பான நகர வாழ்க்கைக்கு மத்தியில் நகரின் இதயத்தில் இவ்வாறு ‘இகோ டூரிஸ்ட் ஸ்பாட்’ அமைந்திருப்பதால் சென்னை வரும் சுற்றுலா பயணிகளும், ஓய்வு தேடி வெளியில் வரும் சென்னை வாசிகளும் இனி சேத்துப்பட்டு ஏரிக்கு அதிகளவில் வந்து செல்வர் என நம்பலாம்.
அப்போ பாஸ்...உங்க உங்க எல்லோரையும் அடுத்த வாரம் அங்கே பார்க்கலாம் இல்லையா...?

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.