Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 31, 2016

தக்காளி தயிர் பச்சடி


தேவையான பொருட்கள் :
பழுத்த தக்காளி – 2,
தேங்காய் துருவல் – அரை கப்
புளிக்காத தயிர் – ஒரு கப்,
பச்சைமிளகாய் – 2, பொடியாக
கொத்தமல்லித்தழை – ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
தாளிக்க:
கடுகு – அரை டீஸ்பூன்,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
* தக்காளி, ப.மிளகாயை கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் தயிரை போட்டு இதில் நறுக்கிய தக்காளி, கொத்தமல்லித்தழை, பச்சைமிளகாய், தேங்காய் துருவல், உப்பு போட்டு நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
* அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் கடுகு தாளித்து தயிர் கலவையில் கொட்டுங்கள்.
* சுவையான தக்காளி தயிர் பச்சடி ரெடி.
* இதில் மாதுளை முத்துக்களை சேர்த்துக் கொள்ளலாம். பிரியாணிக்கும், சப்பாத்திக்கும் ருசிகூட்டும் கலர்ஃபுல் பச்சடி.
-

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.