Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 30, 2016

அதிபர் மைத்திரியுடன் இருந்த மகளை கண்டுபிடிக்க 7 ஆண்டுகளாக போராடும் தாய்!


'இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் தேர்தல் பிரசார சுவரொட்டியில் எனது மகள் காணப்பட்டார். மகள் இப்போது எங்குள்ளாள் என்பதையாவது எனக்கு காட்டுங்கள்' என காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஆணைக்குழுவிடம் தாய் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வவுனியா பிரதேச செயலகத்தில்,   காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு, நேற்று முதல் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் அங்கு சாட்சியமளித்த காசிப்பிள்ளை வனஜா என்ற பெண், " நாங்கள் வவுனியா வடக்கில் இருந்து யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து பல இடங்களுக்கும் சென்றோம். தரப்பாள் கொட்டகைகளுக்கு கீழ் பதுங்குகுழி அமைத்து  வாழ்ந்து வந்த போதிலும், ஷெல் தாக்குதலின் காரணமாக ஒரே இடத்தில் வசிக்க முடியாமையால் குடும்பத்துடன் ஓடினோம். அப்போது இரட்டைவாய்க்கால் பகுதியில் ராணுவ சீருடை அணிந்து வந்த ஆயுதம் ஏந்திய இளைஞர் குழுவொன்று இளம் பிள்ளைகளை பிடித்தது. அவர்கள் யார் என்பதனை என்னால் ஊகிக்கமுடியவில்லை.

அப்போது நான் எனது மகளான காசிப்பிளை ஜெரோமியை அணைத்து பிடித்திருந்தபோது என்னை தாக்கிவிட்டு எனது மகளை அவர்கள் பிடித்து சென்றார்கள். அங்கு எனது மகள் மாத்திரமன்றி பல இளம் வயதினரை அவர்கள் பிடித்து வாகனத்தில் ஏற்றிச்சொன்றார்கள். அப்பிரதேசம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போதிலும் ராணுவம் அப்பகுதியில் முன்னேறிக்கொண்டிருந்தது. இவ்வேளையில், நான் விடுதலைப்புலிகளிடம், 'எனது மகளை பிடித்தீர்களா?' என கேட்டிருந்தேன். ஆனால் அவர்கள் இல்லை என்று தெரிவித்தனர்.

இந்த நிலையில் நாங்கள்  ராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வந்து,  வவுனியா இராமநாதன் முகாமுக்கு வந்து சேர்ந்தோம். அன்று முதல் எனது மகள் காணாமல்போனோர் பட்டியலில் இருந்து வருகிறார். இவ்வாறான நிலையில் 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 7-ம் தேதி,  ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவின் பிரசார சுவரொட்டியில் எனது மகளின் புகைப்படம் ஜனாதிபதியுடன் வந்திருந்ததை பார்த்தேன். அதன் பின்னர் மகள் எங்கோ இருக்கிறாள் என்ற எண்ணத்தில் தேடினேன். ஜனாதிபதி யாழ்ப்பாணம் வந்தபோதும் நான் அவரிடம் படத்தை காட்டி கேட்டேன். அவர் அப்படத்தை தனது மடியில் வைத்து பார்த்து விட்டு தடுமாறிவிட்டார். கடந்த 8-ம் மாதம் நான் அவரை சந்தித்தபோது, 'காணாமல் போனோர் தொடர்பாக தான் எதனையும் கூற முடியாது. எனினும், இது தொடர்பாக விசாரணை செய்து மகள் தொடர்பாக அறிவிப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் இதுவரை எதுவும் கிடைக்கவில்லை. மகளை என்னுடன் விடாவிட்டாலும் பரவாயில்லை. மகள் எங்குள்ளாள் என்பதனையாவது காட்டுங்கள்" என அவர் ஆணைக்குழுவிடம் மன்றாடினார்.

இந்த நிலையில் ஆணைக்குழுவின் தலைவர் மெஸ்வெல் பரணகம, சுவரொட்டி மற்றும் அதுதொடர்பான ஆவணங்களை பார்வையிட்டதன் பின்னர் காணாமல் போனவர்கள் குறித்து விசாரணை செய்ய உள்ள ஓய்வுபெற்ற மேல் நீதிபதி அடங்கிய குழுவிடம் ஒப்படைப்பதாகவும், அவர்கள் விசாரணைகளை நடத்துவார்கள் என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.