ஏன் நாம் தூங்குகின்றோம் என்பது இன்னமும் ஒரு விந்தைதான். ஆனால் தூக்கம் உடல் ஆரோக்கியத்திற்கு மிக நன்மை பயக்கும் என்பது விஞ்ஞான ரீதியான உண்மை. சிலர் சரியான தூக்கமின்மையால் சில உடல் ரீதியான பிரச்சினைகளை அனுபவிப்பார்கள். ஆனால் இதற்கு தூக்கமின்மைதான் காரணம் என்பதனை உணர்ந்திருக்க மாட்டார்கள். ஆக தூக்கத்தினைப் பற்றி முறையாய் அறிவோம்.
அடிக்கடி கலையும் தூக்கம் : சிலர் அடிக்கடி தூக்கத்தில் முழித்துக் கொள்வார்கள். பிறகு நெடு நேரம் கழித்தே மீண்டும் தூக்கம் வரும். இத்தகையோருக்கு
* நோய் எதிர்ப்பு சக்தி வெகுவாகக் குறைந்து இருக்கும்.
* கட்டிகளின் வளர்ச்சி 2-3 மடங்கு வேகமாக இருக்கும்.
* சர்க்கரை நோயின் ஆரம்ப காலமாகி விடும். நன்கு உணவு அருந்திய பின்னாரும் பசிக்கும். இது எடையினை வெகுவாய் கூட்டும்.
* ஒரு நாள் சரிவர தூக்கம் இல்லாவிட்டாலே ஞாபக சக்தி வெகுவாய் பாதிக்கும். தெளிவாய் சிந்திக்க முடியாது.
* பிரச்சினைகளை முறையாய் கையாள முடியாது போகும்.
* மெலடோனின் சுரப்பது குறையும். இதனால் புற்றுநோய் தாக்கும் அபாயம் கூடும்.
* சரியான தூக்கமின்மை மனுஉளைச்சலை கூட்டும். அதனால்
– இருதய நோய் – வயிற்றுப்புண்
– மலச்சிக்கல் – இளமையில் முதுமை ஆகியவை ஏற்படும்.

* தூக்கம் சரியாக இல்லாதவர்கள் சீக்கிரம் இறந்து விடுவர். ஆக முறையாய் தூங்க பழகுங்கள்.
* தூக்கம் சரியாக இல்லாதவர்கள் தூங்கும் பொழுது உங்கள் அறையினை இருட்டாகவே வைத்திருங்கள். டி.வி.யினை, கம்ப்யூட்டரினை முழுமையாய் அணைத்து விடுங்கள். மிகச் சிறிய ஒளி கூட உங்கள் பீனியல் சுரப்பியினை தொந்தரவு செய்யக் கூடும். மெலடோனின், செரடோனின் உற்பத்திகளை அதிகமாய் பாதிப்படைச் செய்யலாம். இவ்வாறு செய்ய முடியாதவர்கள் கண்களுக்கென மென்மையான கருப்பு மறைப்பினை பயன்படுத்தலாம். ஒளி உங்களது கண் நரம்பின் வழியாக ஹைப்போதலமாஸ் எனப்படும் மூளையின் பகுதியினை தாக்கலாம். இவ்வொளியினைப் பெறும் மூளை விழித்து வேலை செய்யத் தயாராகி விடுகின்றது. எனவே தூக்கம் இருட்டு அறையில் இருப்பது நல்லது. முன்பெல்லாம் பகல், இரவு என்று இருந்தது. இன்று இரவே பகலாய் தெரியும் அளவு மின்சாரத்தினை பயன்படுத்துகின்றோம். இது நல்லதல்ல. எனவே இயற்கையோடு ஒத்து வாழ வாருங்கள்.

70குதி-ற்க்கு மேல் அறையின் உஷ்ண இல்லாது பார்த்துக் கொள்ளுங்கள். அநேகரது வீடுகளில் மாடி படுக்கை அறை சற்று உஷ்ணமாக இருக்கின்றது. அதிக உஷ்ணம், அதிக சூடு இவை இரண்டுமே தூக்கத்தினை பாதிக்கும். தூங்கிய சில மணி நேரங்களுக்குப் பிறகு உடலின் உஷ்ணம் குறையும். ஆகவேத்தான் ஆய்வாளர்கள் சற்று குளிர்ந்த அறை தூக்கத்திற்கு நல்லது என்கின்றனர்.
* எலக்ட்ரானிக் பொருட்களை சுத்தமாக அணைத்து விடுங்கள். இல்லையெனில் இவை உங்களின் பீனியல் சுரப்பியினை பாதிக்கும். அலாரம், செல்போன் இவற்றினை குறைந்தது. 3 அடிதள்ளி வையுங்கள்.
* மிக சத்தமான அலாரங்களை உபயோகிக்காதீர்கள்.
* படுக்கையில் இருந்து டி.வி. பார்ப்பது, படுக்கையில் இருந்து லேப்-டாப்பில் வேலை செய்யும் பழக்கம் இருந்தால் அப்படுக்கையில் உங்களுக்குத் தூக்கம் வராது.
* உங்கள் வாழ்க்கைத் துணை அதிகம் குறட்டை விடுபவராக இருந்தால் கண்டிப்பாய் உங்கள் தூக்கம் பாதிக்கும்.
தூக்கத்திற்குத் தயாராகுங்கள்:
* முடிந்த வரை சீக்கிரம் தூங்கச் செல்லுங்கள். உங்கள் உடல் குறிப்பாக அட்ரினல் தனது சக்தியினை இரவு 11 முதல் விடியற்காலை 1-க்குள் புதுப்பித்துக் கொள்கின்றது. உங்களது பித்தப்பையும் நிறைய நச்சுப் பொருட்களை இதே நேரத்தில் வெளியேற்றும். இந்த நேரத்தில் நீங்கள் விழித்திருந்தால் இவை உங்கள் கல்லீரலுக்கே திரும்பும். மின்சாரம் வருவதற்கு முன்னால் மக்கள் இருட்டியவுடன் தூங்கச் சென்று விடுவார்கள். இது இயற்கை தந்த ஆரோக்கியமாக இருந்தது.
* தினமும் ஒரே நேரத்தில் தூங்கச் செல்லுங்கள். தினம் ஒரு நேரம் என்றால் உங்கள் உடல் அதற்கு ஒத்துழைக்காது.
* தூங்குவதற்கு முன்னால் சிறிது நேரம் ஆழ்ந்த மூச்சு பயற்சி செய்யுங்கள். நல்ல சில வாசனைத் தைலங்களால் (aromatherapy) சற்று உடலில் மசாஜ் செய்து கொள்ளுங்கள். நாள் முழுவதும் டென்ஷனில் வேலையிலிருந்து இது சற்று ரிலாக்ஸ் செய்து தரும்.
* தூங்கப் போவதற்கு 2 மணி நேரம் முன்பு திரவ வகை அதாவது தண்ணீர், பால், ஜூஸ் என குடிக்காதீர்கள். அப்பொழுதுதான் இரவு தூக்கத்தில் அடிக்கடி பாத்ரூம் செல்லாது இருப்பீர்கள்.
* தூங்கச் செல்வதற்கு முன் பாத்ரூம் செல்வதை பழக்கிக் கொள்ளுங்கள்.
* தூங்குவதற்கு நான்கு மணி நேரம் முன்பாக புரதம் நிறைந்த ஸ்நாக் எடுத்துக் கொள்ளுங்கள். இது எல்-டிரிப்போபேன் மூலம் உங்களுக்குத் தேவையான மெல்டோனின், செரடோனின் அளிக்கும்.
* சிறிய அளவு பழம் சாப்பிடுங்கள். இது டிரிபடோபேனை நன்கு மூளைக்குச் செல்ல வைக்கும்.
* தூங்குவதற்கு முன் கனத்த ஸ்நாக்ஸ், ஸ்வீட் சாப்பிடாதீர்கள். இது உங்கள் ரத்தத்தில் சர்க்கரையினை ஏற்றி உடனே தூங்க வைக்கும். பின்னர் சர்க்கரையின் அளவு ரத்தத்தில் குறையும் பொழுது தூக்கத்திலிருந்து விழித்து விடுவீர்கள்.
* தூங்குவதற்கு முன்னால் வெதுவெதுப்பான நீரில் ஷவர் அல்லது குளியல் உங்களை நன்கு தூங்க வைக்கும்.
* கண்களுக்கு மென்மையான கறுப்பு திரை அணிந்து தூங்குவது நகரத்தில் அதிக வெளிச்சங்களுக்கு இடையே பாதுகாப்பாக இருக்கும்.
* உங்கள் வேலைகளை தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பு நிறுத்தி விடுங்கள். அப்படியே கம்ப்யூட்டரில் இருந்து சோர்ந்து படுக்கையில் விழாதீர்கள்.
* இரவில் பாதம் சற்று சில்லென ஆகிவிடும். ஏனெனில் அவற்றிக்கு ரத்த ஓட்டம் குறைவாக இருக்கும். ஆகவே பாதங்களுக்கு சாக்ஸ் அணிந்து கொள்ளுங்கள். இது இரவில் திடீரென கண் விழிப்பதனை தடுக்கும்.
* உங்கள் படுக்கை அறையில் டி.வி. இல்லாதிருத்தலே நல்லது. தூங்குமுன் டி.வி. பார்ப்பது மூளையினை வேகமாக்கி தூக்கம் வராது தடுக்கும்.
* மென்மையான இசை தூங்கும் முன் கேட்பது நல்லது.
* அதிகமான மாத்திரைகளை தூக்கத்திற்காக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
* மதிய, மாலை, இரவு வேளைகளில் காபி பருகாதீர்கள். ஆய்வுகள் இது பலருக்கு தூக்கத்தினை கெடுப்பதாகக் கூறுகின்றன.
* மது முதலில் ஒரு வித தூக்கம் போல் இருந்தாலும் பிறகு தூக்கமற்று செய்து விடும். ஆகவே இப்பழக்கத்தினை வழக்கமாக்கி கொள்ளாதீர்கள்.
* குறைந்தது தினம் 30 நிமிடமாவது உடற்பயிற்சி செய்யுங்கள். ஆனால் தூங்குவதற்கு முன்னால் செய்யாதீர்கள். காலை உடற்பயிற்சி மிகவும் நல்லது.
* அதிக எடை இருப்பவராயின் எடையினை குறையுங்கள். அதிக எடை தூக்கத்தினை வெகுவாய் பாதிக்கும்.
குடலுக்கு ஒவ்வாத உணவினைத் தவிருங்கள்
மாத விடாய் நிற்கும் காலத்தில் ஹார்மோன் மாறுதல்களால் தூக்கம் பாதிக்கப்படலாம்.

சோகம் நீங்க
மகிழ்ச்சி என்ற ஒரு உணர்ச்சியினைப் போல் சோகம் என்ற தாக்குதலும் மனிதனுக்கு இருக்கின்றது. 90 சதவீத நோய்களே மனவேதனை சோகத்தின் காரணமாக ஏற்படுகின்றன அல்லது அதிகரிக்கின்றன. இழப்பு, பொருளாதார பற்றாகுறை, நோய், பிரிவு என பல மூல காரணங்கள் சோகத்தினை ஏற்படுத்துகின்றன. இவர்களும் உடல் நலம் பாதிக்கப்பட்டே இருப்பார்கள்.
* முதுகுவலி, கழுத்துவலி, உடல்வலி
* தலைவலி
* வறண்டவாய்
* வயிற்று வலி, வயிற்று போக்கு, மலச்சிக்கல்
* சாப்பிட முடியாமை, எடை குறைவு
* சோர்வு
* அமைதியின்மை
* உடல் சில்லிடுதல், வேர்த்துப் போதல்
* நெஞ்சுவலி, மூச்சு விடதிணறல்
* நரம்புத் தளர்ச்சி
* இரவில் பயம்
* அழுகை

இத்தகைய பாதிப்புகள் ஒருவரை நிரந்தர நோயாளி ஆக்கி விடும். மனம் குழம்பி இருப்பார்கள். முரணாக பேசுவார்கள். எதனையும் மறந்து விடுவார்கள். எதிலும் படபடப்பு இருக்கும். தூக்கி எறிந்து பேசுவதும், வெறுத்து பேசுவதும் இருக்கும். எதனையும் சரியாய் கவனிக்க முடியாது. ஷாக் என்ற அதிர்ச்சி நிலைகூட இருக்கும். இவர்களுக்கு மிக அதிக மருத்துவ கவனிப்புத் தேவை. அத்துடன் உறவுகள், நண்பர்களின் அன்பும், ஆதரவும் இவர்களை விரைவில் குணமடையச் செய்யும். பொதுவிலேயே பண்பான வார்த்தைகள் அன்பான பேச்சு இது செய்யும் மருத்துவத்திற்கு நிகர் எதுவும் இல்லை. ஆக உங்கள் உறவுகள் நோயாளி ஆகாமல் இருக்க நீஙக்ள் தான் இந்த மருத்துவத்தினை செய்ய முடியும். சிறிது நேரம் அவர்கள் கையை பிடித்து உட்காருங்கள். அநேக மாறுதல்கள் தெரியும்.
அன்பான தொடு உணர்வு
நாம் தெரிந்தோ தெரியாமலோ நம் பிள்ளைகள், உறவுகள், நண்பர்கள் இவர்களை சந்திக்கும் பொழுதும், பேசும் பொழுதும் கை கொடுக்கிறோம். கைகளால் முதுகில் தட்டிக் கொடுக்கிறோம். கைகளை மென்மையாய் பற்றிக் கொள்கிறோம். ஆக கைகளால் மற்றவரைத் தொடுவதற்கு அவ்வளவு சக்தி இருக்கின்றது. ஆதலால்தான் பெரியவர்களால் தொட்டு சக்தியினை இளையோருக்கு அளித்தார்கள்.
மென்மையான ஆறுதலான செய்திகளை உங்களால் பேசாமல் சொல்ல முடியும். ஒரு மனிதனுக்கு சூரிய ஒளி, உணவு, நீர் போல அன்பான தொடுதல் மிக முக்கியமாகின்றது. வயிற்றில் இருக்கும் குழந்தை அம்மாவினை தொட்டுக் கொண்டதான் வளருகின்ற. தொடு உணர்வு மனக் காயங்களை ஆற்றும். இது மருந்தினை விடச் சிறந்தது. தொடு உணர்வை வைத்துதான் மசாஜ் முறைகள் தோன்றின. இவை உடல் வலி, மன உளைச்சலை நீக்குவதற்காக மருத்துவ மனையில் கையாளப்படுகின்றது. மௌனமான தொடு உணர்வு அதிகமான மௌன மொழியினைக் கொண்டது.
ஒருவரது கோபம், வேதனை, வலி, மகிழ்ச்சி காலங்களில் அவரை கைகளால் தொடுவது மிகப்பெரிய ஆறுதலாக அமையும். குழந்தைகள் பெற்றோரை கைகளால் இறுக பற்றிக் கொள்வதும் அவர்கள் பாதுகாப்பு உணர்வைப் பெறுவதற்கே.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.