தத்துவவாதிகள், உளவியல் நிபுணர்களும் தற்கொலைக்கான காரணங்களைத் தேடுவதில் பெரும் போராட்டத்தை நடத்தி உள்ளனர்... நடத்திவருகின்றனர்... நடத்திக்கொண்டே இருக்கின்றனர். பொதுவாக சில காரணங்களும் காரணிகளும் அவர்களால் கண்டறியப்பட்டாலும், ஒவ்வொரு தற்கொலைக்குமான காரணம் தனித்தனி. புரிந்து கொள்ள முடியாத புதிராக இன்னும் அந்த மனச்சிக்கல் நீடிக்கிறது. உளவியல் ரீதியில் மரபணு ரீதியில் பல காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன என்றாலும் எதுவும் இறுதிக்காரணமல்ல.
தமிழகத்தில் கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் நடந்த (2015-ல் நடந்த தற்கொலைகளின் எண்ணிக்கை இன்னும் வரையறுக்கப்படவில்லை) தற்கொலைகள் குறித்த விபரங்கள்.
16 ஆயிரம் தற்கொலைகள்
2014-ல் தமிழகத்தில் நடந்த மொத்த தற்கொலைகளின் எண்ணிக்கை 16,122; இதில் ஆண்கள் 10,964 பேர், பெண்கள் 5,155பேர், திருநங்கைகள் 4 பேர் என்கிறது பட்டியில். தேசிய குற்றப் பதிவு ஆணையம் தரும் தகவல்களை அடிப்படையில் 2014-ம் ஆண்டில் தமிழகத்தில் மொத்தமாகவும், கோவை, சென்னை, திருச்சி, மதுரை இந்த நான்கு மாவட்டங்களிலும் தற்கொலைக்கான காரணங்களை ஆராய்ந்தோம்.

குடும்பச்சிக்கலும் உடல் கோளாறுகளும்
தமிழகத்தில் பெரும்பாலான தற்கொலைகள் குடும்பச் சிக்கல்களால்தான் நிகழ்ந்திருக்கின்றன. 2014-ல் மட்டும் குடும்பச் சிக்கல்களால் 3,658 ஆண்களும், 1,913 பெண்களும், 1 திருநங்கையும் என மொத்தம் 5,572 தற்கொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. திருநங்கைகள் அதிகம் (2014-ல் 2 பேர்) தற்கொலை செய்வது உடல் நிலை பிரச்னையால்தான். 28 காரணங்களில், 23 காரணங்களின் கீழ் வகைப்படுத்தும்போது பெண்களைவிட ஆண்கள்தான் அதிகம் தற்கொலை செய்துகொள்ளனர்.
இதில், தேர்வில் தோல்வி, மணவாழ்க்கை சிக்கல், புற்றுநோய், விவாகரத்து ஆகிய பிரச்னைகளில் மட்டும் கிட்டத்தட்ட ஆண்கள் தற்கொலை எண்ணிக்கைக்கு இணையாக பெண்களின் தற்கொலை எண்ணிக்கை இருக்கிறது.
தற்கொலைக்குத் தூண்டும் தகாத உறவு
‘தகாத உறவு’ பிரச்னையில் மட்டும் ஆண்களைவிட பெண்கள் அதிகம் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதுபோன்ற பிரச்னைகளிலும், புகார்களிலும் சிக்கும் பெண்கள் மிக அதிக அளவு மன உளைச்சல்களுக்கு ஆளாகி அவமானமடைந்து இறக்க முடிவெடுக்கின்றனர் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
தேர்வு பயம்
பொதுவாக தேர்வுகளில் பெண்கள் சிறந்து விளங்கினாலும், தேர்வு பயமும் பெண்களுக்குத்தான் அதிகம். 113 பெண்கள் 2014-ல் தேர்வில் தொல்வியடைந்ததால் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்கிறது அதிர்ச்சி்ப்பட்டியல்.
வரதட்சணை கொடுமையாலும் பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். 36 பெண்கள் இதனால் தற்கொலை செய்துள்ளனர். ஒரு ஆண் கூட இதில் இல்லை.

தமிழகத்தின் முக்கியமான நான்கு மாவட்டங்களில் என்ன நிலை?
தமிழகத்தின் தலைநகரம் சென்னைதான் தற்கொலைகளிலும் முதலிடம்! போதைப் பழக்கத்தால் 216 ஆண்கள் சென்னையில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஒரு பெண்கூட தற்கொலை செய்யவில்லை.
சென்னையில் காதல் பிரச்னை பெண்களை பெரிய அளவில் பாதிக்கவில்லை. ஆனால், கோவையில் மட்டும் காதல் பிரச்னையால் 8 ஆண்கள் தற்கொலை செய்ய, 8 பெண்கள் தற்கொலை செய்துள்ளனர். பொதுவாக திருச்சியை அமைதியான நகரம் என்பார்கள். 2014-ம் ஆண்டில் சென்னையில் 2,214, கோவையில் 427, மதுரையில் 213 தற்கொலைகள் நடக்க, திருச்சியில் 139 தற்கொலைகள்தான். மற்ற மூன்று மாவட்டங்களிலும் போதைப் பிரச்னையால் நடக்கும் தற்கொலைகள் நான்காம் இடத்தைப் பிடிக்க, மதுரையில் மட்டும் மூன்றாவது இடம்.
திருச்சியில் ஒருவர் கூட போதைப் பழக்கத்தால் தற்கொலை செய்துகொள்ளவில்லை. ஆனால், அதே ஆண்டு மதுரையில் 40 ஆண்கள் தற்கொலை செய்துள்ளனர். எந்த அளவுக்கு ஒரு நகரம் உலகமயமாக்கப்பட்டுள்ளதோ, எந்த அளவுக்கு ஒரு நகரம் வளர்ந்துள்ளதோ அதே அளவுக்கு, அந்ததந்த நகரங்களில் தற்கொலை எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது இந்த பட்டியலில் ரகசியமாய் தெரியும் உண்மை.
இந்த காரணிகளை களைந்து உயிர்களை எப்படிக் காப்பாற்றப்போகிறோம்?

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.